மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேர்வு குறித்த உரையாடல் 2023 நிகழ்வில் அதிக அளவில் பங்கேற்க வேண்டும் என்று திரு தர்மேந்திர பிரதான் வலியுறுத்தல்

प्रविष्टि तिथि: 06 DEC 2022 3:21PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, நடத்தும் தேர்வு குறித்த உரையாடல் 2023 நிகழ்வில் அதிக அளவில் மாணவர்களையும், ஆசிரியர்களையும், பெற்றோர்களையும் கலந்துகொள்ளுமாறு மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் கேட்டுக் கொண்டார்.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தனித்துவம் மிக்க கலந்துரையைாடல் தேர்வு குறித்த உரையாடல் 2023 நிகழ்வில், நாடு முழுவதிலுமிருந்து மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் கலந்துகொண்டு தேர்வு குறித்த மாணவர்களின் மனஅழுத்தத்தைப் போக்கி வாழ்க்கையை உற்சாகமாகக் கொண்டாடுவதற்கு அவர்களை தயார் படுத்துவதே இதன் நோக்கமாகும். இந்த நிகழ்வு மத்திய கல்வி அமைச்சகத்தின்  பள்ளிக் கல்வித்துறை  மூலம் கடந்த 5 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகிறது.

9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோர் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் போட்டி மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த நிகழ்வில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் பின்வரும் இணையதள முகவரியில் நவம்பர் 25, 2022 முதல் 30 டிசம்பர் 2022 வரை https://innovateindia.mygov.in/ppc-2023/ பதிவு செய்துகொள்ளலாம்.

 ----- 

AP/GS/KPG/IDS


(रिलीज़ आईडी: 1881173) आगंतुक पटल : 191
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , English , Urdu , Marathi , हिन्दी , Punjabi , Odia , Malayalam