மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தமிழ் தொழில்முனைவோர் குழு காசி தமிழ் சங்கமத்தில் கலந்துகொள்ள வாரணாசி சென்றடைந்தனர்

Posted On: 06 DEC 2022 2:55PM by PIB Chennai

தமிழகத்தைச் சேர்ந்த தொழில் முனைவோர் குழு ஒன்று காசி தமிழ் சங்கமத்தில் கலந்து கொள்வதற்காக எர்ணாகுளம்-பாட்னா அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் புனித நகரான காசியை சென்றடைந்தனர்.  நேற்று வந்த அவர்களை கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் திரு லால்ஜி சௌத்ரி வாரணாசி கண்டோன்மெண்ட் ரயில் நிலையத்தில் மாலை அணிவித்து, பூக்களை தூவி வரவேற்றார்.

இந்த குழுவினர் இன்று காலை ஸ்ரீகாசி விஸ்வநாதர் கோயிலுக்கு சென்று வழிபட்டதுடன், கங்கா படித்துறையிலும் வழிபாடு நடத்தினர்.

அன்னை விசாலாட்சி மற்றும் அன்னை அன்னபூர்னா சந்நதிகளுக்கு  சென்ற அவர்கள் அங்கும் வழிபாடு செய்தனர்.  இன்று மாலை ரவிதாஸ் படித்துறையில் கங்கா ஆரத்தியை அவர்கள் தரிசிப்பார்கள்.

கார்த்திகை தீபத்தையொட்டி பனாரஸ் இந்து பல்கலைக்கழக வளாகத்தில் தீபம் ஏற்றப்படும் ஆயிரக்கணக்கான விளக்குகள் ஏற்றப்பட்டு ஒளியை வழங்கும். அந்த இடமே தமிழகத்தைச் சேர்ந்த விருந்தினர்களாலும், பனாரஸ் இந்து பல்கலைக்கழக மாணவர்களாலும் அலங்கரிக்கப்படும்.

**************

Sri/PKV/AG/RR


(Release ID: 1881147) Visitor Counter : 153