மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

‘காசி தமிழ்ச்சங்கமம்’ நிகழ்வின் ஒரு பகுதியாக 8 நாள் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும்

Posted On: 05 DEC 2022 4:18PM by PIB Chennai

 ‘காசி தமிழ்ச்சங்கத்தில் கலாச்சாரம், பாரம்பரியம், ஆன்மீகம் போன்ற பல்சுவைகளை உள்ளடக்கிய நிகழ்ச்சிகளின்  ஈர்ப்பை அதிகரிக்கும் வகையில், 8 நாள் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளது. இந்திய விளையாட்டு ஆணையம் ஏற்பாடு செய்துள்ள இந்த விளையாட்டுப்போட்டிகள் பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகத்தில் 2022 டிசம்பர் 8 -15ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த விளையாட்டுப்போட்டிகளில் கலந்துகொள்ளும் விளையாட்டு வீர்ர்கள் காசி தமிழ்ச்சங்கமத்தை ரசிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. வடக்கு மற்றும் தெற்கு இந்தியாவில் இருந்து ஆண்கள் மற்றும் பெண்கள் அடங்கிய விளையாட்டு வீர்ர்கள் எட்டு விளையாட்டு பிரிவுகளில் பங்குபெறுகின்றனர்.

காசி தமிழ்ச்சங்கமம் விளையாட்டுப் போட்டிகள் அட்டவணை: 2022 டிசம்பர் 8-15ஆம் தேதி வரை

 

எண்

தேதி

நாள்

விளையாட்டு

நடைபெறும்

இடம்

1

8 டிசம்பர் 2022

வியாழக்கிழமை

ஹாக்கிப் போட்டி

ஹாக்கி ஸ்டேடியம், பனாரஸ் இந்துப்பல்கலைக் கழகம்

2

9 டிசம்பர்

2022

வெள்ளிக்கிழமை

கால்பந்தாட்டப் போட்டி

கால்பந்தாட்ட அரங்கம், பனாரஸ் இந்துப்பல்கலைக் கழகம்

3

10 டிசம்பர் 2022

சனிக்கிழமை

கிரிக்கெட் போட்டி

ஐஐடி கிரிக்கெட் மைதானம், பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகம்

4

11 டிசம்பர் 2022

ஞாயிற்றுக்கிழமை

டேபிள் டென்னிஸ் மற்றும் பேட்மிண்ட்டன் போட்டி

எம்பி ஹால், பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகம்

5

12 டிசம்பர் 2022

திங்கட்கிழமை

வாலிபால் போட்டி

பனாரஸ் இந்துப்பல்கலைக்கழக விளையாட்டு மைதானம்

 

6

13 டிசம்பர் 2022

செவ்வாய்க்கிழமை

கோ-கோ போட்டி

பனாரஸ் இந்துப்பல்கலைக்கழக விளையாட்டு மைதானம்

 

7

14 டிசம்பர்

புதன்கிழமை

கபடிப் போட்டி

பனாரஸ் இந்துப்பல்கலைக்கழக விளையாட்டு மைதானம்

 

**********

AP/GS/RS/IDS


(Release ID: 1881008)