விண்வெளித்துறை
விண்வெளித்துறையில் உலகளவில் முக்கியத்துவம் பெற்றிருக்கும் இந்தியா, ஐக்கிய அரபு அமீரகத்தோடு இணைந்து அடுத்தக்கட்டத்திற்கு செல்ல முனைப்பு: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்
Posted On:
05 DEC 2022 3:27PM by PIB Chennai
விண்வெளித்துறையில் உலகளவில் முக்கியத்துவம் பெற்றிருக்கும் இந்தியா, ஐக்கிய அரபு அமீரகத்தோடு இணைந்து அடுத்தக்கட்டத்திற்கு செல்ல முனைப்போடு செயல்பட்டு வருகிறது என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.
“அபுதாபி விண்வெளி நிகழ்வில்” கலந்து கொள்ளும் இந்தியக் குழுவிற்கு மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தலைமையேற்றார்.
மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் (தனி பொறுப்பு), புவி அறிவியல் (தனி பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர்கள், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் பேசும்போது, “விண்வெளித்துறையில் பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்துவதில், இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமிரகம் உறுதிபூண்டுள்ளது. விண்வெளி தொடர்பான நடவடிக்கைகளில் 7 தசாப்பதங்களுக்கும் மேலாக இந்தியா வெற்றிநடைபோடுகிறது. குறிப்பாக, உள்நாட்டு தொழில்நுட்ப உதவியுடன் ஏவுகணைத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. வருங்காலத்தில் இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமிரகம் இடையே ஒருங்கிணைந்த பல்வேறு நடவடிக்கைகளுக்கு அடித்தளமாக அபுதாபி விண்வெளி நிகழ்வு அமையும் என்பதில் உறுதியாக நம்பிக்கைக் கொண்டுள்ளேன்” என்றார்.
இந்த நிகழ்வின் தொடக்க விழாவில், இஸ்ரேல் அதிபர் திரு ஐசக் ஹெர்சாக் உடன் இணைந்து இந்தியாவின் சார்பில் டாக்டர் ஜிதேந்திர சிங் உரையாற்றினார்.
டாக்டர் ஜிதேந்திர சிங், ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவுத்துறை அமைச்சர், பஹ்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் இஸ்ரேலின் நவீன தொழில்நுட்பங்கள் துறை அமைச்சர் ஆகியோருடன் ‘விண்வெளி இராஜதந்திரம் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பை செயல்படுத்துவதில் வெளியுறவுக் கொள்கையின் பங்கு’ குறித்த அமைச்சரவைக் கூட்டத்திலும் கலந்து கொண்டார்.
**************
AP/GS/RS/IDS
(Release ID: 1880996)
Visitor Counter : 196