அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

“இந்தியாவில் சுகாதாரம் மற்றும் அறிவியல் துறையில் பெண்கள் தலைமையிலான மாற்றம்” என்ற மாநாட்டை புதுதில்லியில் மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் நாளை தொடங்கி வைக்கிறார்

Posted On: 05 DEC 2022 12:56PM by PIB Chennai

இந்தியாவில் சுகாதாரம் மற்றும் அறிவியல் துறையில் பெண்கள் தலைமையிலான மாற்றம்என்ற மாநாட்டை மத்திய அறிவியல், தொழில்நுட்பம் (தனிப்பொறுப்பு), புவி அறிவியல் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை  இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் புதுதில்லியில் நாளை தொடங்கிவைக்கிறார்.

இந்த மாநாட்டில் மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார், பிரஞ்ச் கேட்ஸின்  திருமதி மெலிந்தா போன்றவர்கள் கலந்துகொள்கிறார்கள்.

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உயிரித்தொழில் நுட்பவியல் துறை, உயிரித் தொழில்நுட்பம் வர்த்தக ஆராய்ச்சி உதவி கவுன்சில் போன்ற அமைப்புகளால் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த காலக்கட்டங்களில்  சுகாதாரத்துறையில்  பல சவால்களை எதிர்நோக்கி மிகச் சிறப்பாக செயல்பட்ட பெண்களை கவுரவப்படுத்தி கொண்டாடுவது இந்த மாநாட்டின் தனிச்சிறப்பாகும்.

உயிரித்தொழில்நுட்பிவியல் துறையின் செயலரான டாக்டர் ராஜேஷ் எஸ் கோகலே பேசும்போது, பல ஆண்டுகளாக பெண்கள் தலைமைப் பொறுப்பேற்றிருக்கும் துறைகளில் மிகப்பெரிய முன்னேற்றம் அடைந்துள்ளது. இந்தியாவை வல்லரசு நாடாக மாற்றுவதற்கு பெண்கள் பல்வேறு துறைகளில்  தலைமைப் பொறுப்புகளில் அமர வேண்டும் என்றும் அதற்கு பெண்கள் மேம்பாடு முக்கியம் என்று நமது பிரதமர் கூறியிருந்தார். எனவே, பெண்கள் மேம்பாட்டிற்காக நாம் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்என்றார்.

**************

AP/GS/RS/IDS



(Release ID: 1880938) Visitor Counter : 131