வெளியுறவுத்துறை அமைச்சகம்
ராஜஸ்தானின் வரலாற்று சிறப்பு மிக்க உதயப்பூரில் ஜி20 நாடுகளைச்சேர்ந்த பிரதிநிதிகளின் முதல் அமர்வு தொடக்கம்
प्रविष्टि तिथि:
04 DEC 2022 9:27PM by PIB Chennai
ராஜஸ்தானின் வரலாற்று சிறப்பு மிக்க உதயப்பூரில் ஜி20 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளின் முதல் அமர்வு 4.12.2022 அன்று தொடங்கியது.
இந்த அமர்வி அடுத்து வரக்கூடிய ஆண்டுகளில் இந்தியா சிறப்பு கவனம் செலுத்துகின்ற குறிப்பாக, பொருளாதார வளர்ச்சி, காலநிலை மாற்றம், பெண்கள் தலைமையிலான மேம்பாடு மற்றும் இதர முக்கிய தலைப்புகளில் பல்வேறு கட்ட விவாதங்கள் நடைபெறுகிறது. சமீபத்தில் ஜி20 உச்சி மாநாட்டிற்கு தலைமைப்பொறுப்பை இந்தியா ஏற்றது. இந்தியாவின் தலைமையின் கீழ், செயல்படும் பல்வேறு குழுக்களுக்கான பணிகளும், செயலாற்ற வேண்டிய நடைமுறை விளக்கங்களும் விரிவாக விளக்கப்படும். உலக அளவில் நிலவும் பல்வேறு சவால்களுக்கும், பிரச்சனைகளுக்கும் தீர்வுகாணும் நோக்கில் இந்தியா மற்ற நாடுகளோடு இணைந்து, தீர்வுகளுக்காக முயற்சியை முன்னெடுத்து செல்லும்.
இந்தியாவின் சார்பாக கலந்துகொள்ளும் திரு அமிதாப் கந்த் பேசும் போது, ஒவ்வொரு பிரச்சனையும் தீர்வு காண்பதற்கான ஒரு சந்தர்ப்பமாகவே இந்தியா பார்க்கிறது என்றும், ஒவ்வொரு பிரச்சனையையும் எதிர்நோக்கி சிறப்பான தீர்வு காண்பதையே நமது தலைமையின் முக்கிய அம்சமாகும் என்றும் கூறினார். இந்த அமர்வின் பல்வேறு நிகழ்வுகள் வரும் 7ம் தேதி வரை நடைபெறுகிறது.
*****
(Release ID: 1880863)
SRI/GS/RS/RR
(रिलीज़ आईडी: 1880896)
आगंतुक पटल : 274