சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
டெல்லி என்சிஆர் பகுதிகளில், ஜிஆர்ஏபின் ஸ்டேஜ் III விதிகள் உடனடியாக அமலுக்கு வருகிறது
प्रविष्टि तिथि:
04 DEC 2022 6:13PM by PIB Chennai
ஜிஆர்ஏபி எனப்படும் திருத்தப்பட்ட தரம் மேம்படுத்தப்பட்ட செயல் திட்டத்தின் துணைக்குழுக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில், புதுடில்லியின் காற்றின் தரம் மற்றும் மாசுபாட்டின் அளவு குறித்து மதிப்பாய்வு நடத்தப்பட்டது. மதிப்பாய்வில், கடந்த 24 மணி நேரத்தில், டெல்லியின் காற்று தரக் குறியீடு மேலும் மாசுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, 2021 டிசம்பர் 4ம் தேதி, டெல்லியின் காற்று தரக் குறியீடு 407 ஆக இருந்ததாக மத்திய மாசுக் கட்டப்பாட்டு வாரியத்தின் புள்ளிவிவரங்களில் பதிவாகியுள்ளது. எனவே தற்போது, டெல்லியின் காற்று தரக்குறியீடு மிகவும் மோசம் என்ற பிரிவிற்கு வந்துவிட்டதால், ஜிஆர்ஏபின் ஸ்டேஜ் IIIன் விதியின் கீழ், மேலும் காற்றின் தரம் மாசுபடாமல் தடுக்கும் நடவடிக்கைகள் உடனடியாக அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள ஸ்டேஜ் I மற்றும் ஸ்டேஜ் IIன் விதிகளும் கடைப்பிடிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே அனைத்து ஏஜென்சிகளும்,ஸ்டேஜ் IIIன் விதிகளை நடைமுறைப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன. அது மட்டுமல்லாமல், ஸ்டேஜ் IIIன் விதிகள் கடைப்பிடிக்கப்படுகிறாதா? என்பது குறித்த சிறப்பு ஆய்வு மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக கட்டுமானம் மற்றும் இடிப்புப்பணிகள், சுரங்கம் தோண்டுதல் தொடர்பான செயல்கள், கற்களை உடைத்தல், அங்கீகரிக்கப்படாத எரிபொருளைப் பயன்படுத்தும் ஆலைகள் போன்றவற்றைத் தீவிரமாகக் கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
******
AP/ES/DL
(रिलीज़ आईडी: 1880835)
आगंतुक पटल : 221