தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் தலைமையில் இஎஸ்ஐசியின் 189வது கூட்டம்
प्रविष्टि तिथि:
04 DEC 2022 5:48PM by PIB Chennai
ஊழியர்கள் மாநில காப்பீட்டுக் கழகத்தின் (இஎஸ்ஐசி)189வது கூட்டம் இன்று அதன் தலைமையகத்தில் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு, சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பல முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.
இஎஸ்ஐ திட்டத்தின் கீழ் காப்பீடு செய்யப்பட்ட தொழிலாளர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களின் எண்ணிக்கையில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதைக்கருத்தில் கொண்டு, உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் வலியுறுத்தினார். இஎஸ்ஐ மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்களின் உள்கட்டமைப்பை படிப்படியாக வலுப்படுத்தவும் நவீனப்படுத்தவும் ‘நிர்மான் சே சக்தி’ முயற்சி தொடங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில், மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை இணையமைச்சர் திரு ராமேஸ்வர் தெலி கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில், திரு பூபேந்தர் யாதவ் இஎஸ்ஐயின் மாதாந்திர டிஜிட்டல் இதழான ‘ இஎஸ்ஐ சமாச்சார்’ முதல் இதழை வெளியிட்டார்.
2021-22 ஆம் ஆண்டிற்கான கணக்குகள் மற்றும் சிஏஜி அறிக்கை மற்றும் 2021-22 ஆம் ஆண்டிற்கான வருடாந்திர அறிக்கை மற்றும் அதன் பகுப்பாய்வு ஆகியவை அங்கீகரிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டன. இது மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் ஒப்புதலுக்குப் பிறகு நாடாளுமன்றத்தில் வைக்கப்படும்.
******
AP/PKV/DL
(रिलीज़ आईडी: 1880827)
आगंतुक पटल : 267