குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

குடியரசுத் தலைவர் டிசம்பர் 4 - 5 ம் தேதிகளில் ஆந்திராவிற்கு சுற்றுப்பயணம்

प्रविष्टि तिथि: 03 DEC 2022 6:46PM by PIB Chennai

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஆந்திரப் பிரதேசத்திற்கு, 2022 டிசம்பர் 4ம் தேதி  முதல் 5ம் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 2022 டிசம்பர் 4ம் தேதி விஜயவாடாவில் ஆந்திரப்பிரதேச அரசால் வழங்கப்படும் வரவேற்பு நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கிறார். அன்று மாலை விசாகப்பட்டினத்தில் இந்திய கடற்படை தினக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளும் திருமதி. திரௌபதி முர்மு, காணொலிக் காட்சி மூலம், பாதுகாப்பு, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை, பழங்குடியின விவகாரங்கள் துறைகள் சார்பில் செயல்படுத்தப்பட உள்ள நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். 

2022 டிசம்பர் 5ம் தேதி, திருப்பதியில் உள்ள ஸ்ரீ பத்மாவதி மகிளா விஸ்வவித்யாலயத்திற்குச் செல்கிறார். அங்கு, மாணவர்கள், ஆசிரியர்கள், மகளிர் சாதனையாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன், குடியரசுத் தலைவர்  திருமதி. திரௌபதி முர்மு கலந்துரையாட உள்ளார்.

******

AP/ES/DL


(रिलीज़ आईडी: 1880717) आगंतुक पटल : 184
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Punjabi , Kannada