சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவராக திரு ஹன்ஸ்ராஜ் கங்காராம் ஆஹிர் பொறுப்பேற்பு
प्रविष्टि तिथि:
02 DEC 2022 5:34PM by PIB Chennai
தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவராக திரு ஹன்ஸ்ராஜ் கங்காராம் ஆஹிர் இன்று புதுதில்லியில் பொறுப்பேற்று கொண்டார். அடிப்படையில் விவசாயியான அவர், மகாராஷ்டிர மாநிலம் சந்திரப்பூர் மாவட்டதைச் சேர்ந்தவராவார்.
திரு ஹன்ஸ்ராஜ் கங்காராம் ஆஹிர் மகாராஷ்டிர மாநிலம் சந்திரப்பூர் மக்களவை தொகுதியிலிருந்து நான்கு முறை தேர்வு செய்யப்பட்டுள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தின் மேலவை உறுப்பினராகவும் அவர் பணியாற்றியுள்ளார். நிலக்கரி மற்றும் எஃகு துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுத் தலைவராகவும் பல்வேறு துறைகளில் நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார். 16- வது மக்களவை பகுதி காலத்தின் போது, மத்திய உள்துறை மற்றும் ரசாயனம் மற்றும் உரங்கள் துறை இணையமைச்சராகவும் அவர் பதவி வகித்துள்ளார்.
**************
SM/PLM/RS/RJ
(रिलीज़ आईडी: 1880565)
आगंतुक पटल : 552