பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழுக்கான ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறையின் நாடு தழுவிய முகாம் வெற்றிகரமாக நிறைவடைந்தது
Posted On:
01 DEC 2022 6:10PM by PIB Chennai
டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழுக்கான ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறையின் நாடு தழுவிய முகாம் வெற்றிகரமாக நிறைவடைந்தது. முக அங்கீகார தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழை கிடைக்கச் செய்து வெளிப்படைத்தன்மை மற்றும் பயன்பாட்டை எளிதாக்குவதே நாடு தழுவிய இயக்கத்தின் நோக்கமாகும்.
நவம்பர் 30, 2022-வரை மொத்தம் 30.34 லட்சம் மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ்களை பயன்படுத்தியுள்ளனர். இதில் 2.85 லட்சம் டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ் முகஅங்கீகாரம் மூலம் உருவாக்கப்பட்டது.
இந்த இயக்கத்தில் பாரத் ஸ்டேட் வங்கி மற்றும் பஞ்சாப் தேசிய வங்கி பங்கேற்றன. நவம்பர் 1ம் தேதி முதல் 30ம் தேதி வரை வடக்கே ஸ்ரீநகர் முதல் தெற்கே நாகர்கோவில் வரையும் கிழக்கே குவஹாத்தி முதல் மேற்கே அகமதாபாத் வரையிலும் பல்வேறு நகரங்களில் சிறப்பு விழிப்புணர்வு முகாம்கள் நடைபெற்றன.
**************
SM/IR/KPG/IDS
(Release ID: 1880381)
Visitor Counter : 167