மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத்துறை செயலாளராக திரு சஞ்சய் குமார் பொறுப்பேற்றுக் கொண்டார்
Posted On:
01 DEC 2022 5:44PM by PIB Chennai
மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத்துறை செயலாளராக திரு சஞ்சய் குமார் புதுதில்லி சாஸ்திரி பவனில் இன்று (01.12.2022) பொறுப்பேற்றுக் கொண்டார். பொறுப்பேற்றவுடன் அமைச்சகத்தின் உயர் அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார். பள்ளிக் கல்வி தொடர்புடைய பல்வேறு திட்டங்கள், தன்னாட்சி நிறுவனங்கள், ஆகியவற்றின் செயல்பாடு குறித்து அவர் ஆய்வு செய்தார். தேசியக் கல்விக் கொள்கை 2020-ஐ அமல்படுத்துதல், ஆசிரியர்களின் திறனை வளப்படுத்துதல், பள்ளிகளின் உள்கட்டமைப்பு, எதிர்வரும் பிரதமரின் பரீக்ஷா பே சார்ச்சா உரையாடல் நிகழ்ச்சி ஆகியவை குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. நாட்டின் அனைத்து மாணவர்களுக்கும் எளிதில், தரமான மற்றும் நியாயமான கட்டணத்தில் கல்வி கிடைக்க பங்களிப்பு செய்ய தாம் எதிர்நோக்கியிருப்பதாக திரு குமார் குறிப்பிட்டார்.
**************
SM/IR/KPG/IDS
(Release ID: 1880369)
Visitor Counter : 171