நித்தி ஆயோக்
சமூகம் சார்ந்த கண்டுபிடிப்பாளர் உதவித்தொகைக்கான புதிய விண்ணப்பங்களை அடல் புதிய கண்டுபிடிப்பு இயக்கம் வரவேற்றுள்ளது
Posted On:
01 DEC 2022 3:16PM by PIB Chennai
சமூகம் சார்ந்த கண்டுபிடிப்பாளர் உதவித்தொகைக்கான புதிய விண்ணப்பங்களை வரவேற்பதாக அடல் புதிய கண்டுபிடிப்பு இயக்கம், நித்தி ஆயோக், 2022, டிசம்பர் 1 அன்று அறிவித்துள்ளது. முன்னேற விரும்பும் சமூகம் சார்ந்த கண்டுபிடிப்பாளர்களின் தொழில்முனைவோர் பயணத்திற்கு உதவிசெய்ய அவர்களுக்கு அடிப்படைக் கட்டமைப்பு மற்றும் அறிவு வளர்ச்சிக்கு உதவ யுஎன்டிபி இந்தியாவுடன் இணைந்து இந்த முன்முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. சமூகம் சார்ந்த கண்டுபிடிப்பாளர் உதவித்தொகை தற்போது 2 2 பேருக்கு வழங்கப்படுகிறது.
5 கட்டங்களாக கட்டமைக்கப்பட்டுள்ள புதிய கண்டுபிடிப்பாளர் விண்ணப்பங்களுக்கு https://docs.google.com/forms/d/e/1FAIpQLSd8v1_D8DntoHPr9rSL1rBSeBCF2cUKgt4k-h4AiOVGV6BFBA/viewform என்ற இணையதளத்தைக் காணலாம்.
இது ஒரு வருட கால நிதியுதவித் திட்டமாகும், இதில் ஆர்வமுள்ள சமூக கண்டுபிடிப்பாளர்கள் தங்கள் சமூக-பொருளாதார பின்னணியைப் பொருட்படுத்தாமல் விண்ணப்பிக்கலாம். இது போதுமான உள்கட்டமைப்பு மற்றும் நிதியுதவி மூலம் அறிவு, வழிகாட்டுதல், சமூகத்தில் ஈடுபாடு ஆகியவை வளம்பெறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நாடு முழுவதும் அடல் சமூக கண்டுபிடிப்பு மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. தற்போது 9 மாநிலங்களில் இதுபோன்ற 14 மையங்கள் உள்ளன, மேலும் எதிர்காலத்தில் 36 மையங்களை அமைத்து எண்ணிக்கை 50 ஆக உயர்த்தப்படவுள்ளன.
******
SM/SMB/IDS
(Release ID: 1880363)
Visitor Counter : 221