பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
“கர்மயோகி இயக்கத்தின்” கீழ் மத்திய அரசின் அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கான ஆண்டு திறன் வளர்ப்பு திட்ட அணுகுமுறை அறிக்கையை அமைச்சரவை செயலாளர் திரு ராஜீவ் கௌபா விக்கியான் பவனில் இன்று தொடங்கிவைத்தார்
Posted On:
01 DEC 2022 4:21PM by PIB Chennai
கர்மயோகி இயக்கத்தின் மூலம் அரசின் மனிதவள மேலாண்மை நடைமுறைகளில் முன்னேற்றம் அடையச் செய்ய வேண்டும் என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை வரிசையில், திறன் வளர்ப்பு ஆணையம் விக்கியான் பவனில் இன்று ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் அமைச்சகம் மற்றும் துறை ஆண்டு திறன் வளர்ப்புத் திட்டம் உருவாக்கம் குறித்து அனைத்து அமைச்சகங்கள் மற்றும் துறை செயலாளர்களுடன் அமைச்சரவை செயலாளர் திரு ராஜீவ் கௌபா உரையாடினார்.
இக்கூட்டத்தில் திறன் வளர்ப்பு ஆணையம் தயாரித்திருந்த ஆண்டு திறன் வளர்ப்புத் திட்டங்கள் குறித்த அணுகுமுறை அறிக்கையும் தொடங்கிவைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சரவை செயலாளர் திரு ராஜீவ் கௌபா, குறுகிய காலத்திற்குள் ஆணையத்தின் உதவியுடன் ரயில்வே மற்றும் காவல்துறையைச் சேர்ந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கர்மயோகி இயக்கத்தின் கீழ் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதற்கு பாராட்டுத் தெரிவித்தார். அத்துடன் பல்வேறு மத்திய அமைச்சர்களின் 200-க்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டதாக கூறினார்.
**************
SM/IR/KPG/KRS
(Release ID: 1880291)
Visitor Counter : 195