சுற்றுலா அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நீடித்து நிலைக்கும் சுற்றுலா மையங்களை உருவாக்குவது குறித்த பிராந்திய கருத்தரங்குக்கு சுற்றுலா அமைச்சகம் ஏற்பாடு

Posted On: 30 NOV 2022 12:30PM by PIB Chennai

நாட்டில் நீடித்து நிலைக்கும் சுற்றுலா மையங்களை உருவாக்க, ஐஐடிடிஎம், யுஎன்இபி, ஆர்டிஎஸ்ஓஐ ஆகியவற்றுடன் இணைந்து சுற்றுலா அமைச்சகம் முதலாவது பிராந்திய கருத்தரங்கை கஜூரோஹோ-வில் 29.11.2022  நடத்தியது. இந்த மத்திய மற்றும் மேற்கு பிராந்திய கருத்தரங்கில் மூத்த அரசு அதிகாரிகள், சுற்றுலாத்துறையைச் சேர்ந்தவர்கள், மத்தியப்பிரதேசம், சத்தீஷ்கர், மகாராஷ்ட்ரா, குஜராத், டாமன் & டையூ, கோவா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.

சுற்றுலா அமைச்சக இயக்குநர் திரு பிரசாந்த் ரஞ்சன், சிறப்புரையாற்றினார். நீடித்த சுற்றுலாவின் தேவை குறித்து அவர் விளக்கினார். சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கான பிரதமரின் தொலைநோக்கு குறித்து அவர் விளக்கினார். சுற்றுலா அமைச்சகம், தொடங்கியுள்ள பயணத்துக்கான லைவ் பிரச்சாரத்தை அவர் அறிமுகம் செய்தார்.

சுற்றுலா அமைச்சகத்தின சுதேஷ் தர்ஷன் 1.0-ன் வெற்றி குறித்து அமைச்சகத்தின் உதவி தலைமை இயக்குநர் திரு உத்தங் ஜோஷி, குறிப்பிட்டார். சுதேஷ் தர்ஷன் 2.0 குறித்தும் அவர் விளக்கினார்.

**************

AP/PKV/KPG/KRS


(Release ID: 1879958) Visitor Counter : 193