நிலக்கரி அமைச்சகம்

நிலக்கரி அமைச்சகம் மும்பையில் முதலீட்டாளர் மாநாட்டை நடத்துகிறது

Posted On: 29 NOV 2022 11:44AM by PIB Chennai

முதல் 5 கட்டங்களில் 64 நிலக்கரி சுரங்கங்களுக்கான ஏலம் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்ட நிலையில், 6-வது கட்டமாக 133 சுரங்கங்களுக்கான ஏல நடைமுறைகளை நிலக்கரி அமைச்சகம் தொடங்கியது. இதில், 21 புதிய நிலக்கரி சுரங்கங்களும், ஏற்கனவே ஏலம் விடப்பட்டு மீண்டும் ஏலத்துக்கு வந்த 62 சுரங்கங்களும் அடங்கும். இந்த ஏலம் இந்த மாதத்தில் நடைபெற்றது.

வணிக ரீதியிலான இந்த ஏலத்தில் தொழில்நுட்ப அல்லது நிதி ரீதியிலான தகுதிகள் ஏதும் இடம்பெறாத நிலையில், ஏற்கனவே நிலக்கரி சுரங்க ஏலத்தில் பங்கு பெறாத ஏலதாரர்களும் வெற்றிகரமாக சுரங்கங்களை ஏலம் எடுத்தனர். ஏலம் எடுப்பவர்களின் பங்கேற்பை  மேலும் அதிகரிக்கும் நோக்கில் நிலக்கரி அமைச்சகம் மும்பையில் டிசம்பர் 1-ஆம் தேதி முதலீட்டாளர் மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது. இந்த மாநாட்டிற்கு நிலக்கரித்துறை அமைச்சர் திரு.பிரஹலாத் ஜோஷி தலைமை வகிக்க உள்ளார். மகாராஷ்டிர முதலமைச்சர் திரு.ஏக்நாத் ஷிண்டே, துணைமுதலமைச்சர் திரு.தேவேந்திர ஃபட்நாவிஸ், நிலக்கரித்துறை இணையமைச்சர் திரு.ராவ்சாஹிப் பாட்டீல் தன்வீ உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.  

விரிவான ஆலோசனைகளுக்கு பின்னர் சுரங்கங்களின் பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது. பாதுகாக்கப்பட்ட பகுதிகளின்கீழ் வரும் சுரங்கங்கள், வனவிலங்கு சரணாலயங்கள், 40 சதவீதத்துக்கும் அதிகமான காடுகள், அதிக அளவில் கட்டிடங்கள் உள்ள பகுதிகள் போன்ற இடங்களில் உள்ள சுரங்கங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன.

வணிக ரீதியான ஏலங்களுக்கு நிலக்கரி அமைச்சகத்துக்கு பரிவர்த்தனை ஆலோசனை நிறுவனமாக செயல்பட்டு வரும் எஸ்பிஐ கேப்பிட்டல் மார்க்கெட்ஸ் நிறுவனம், ஏலத்தை நடத்துவதில் நிலக்கரி அமைச்சகத்துக்கு உதவி வருகிறது.

                               **************

SM/PLM/KG/KRS



(Release ID: 1879786) Visitor Counter : 123