தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

சமஸ்கிருதத்தில் எடுக்கப்பட்ட யாணம் ஆவணப்படம் இந்தியாவின் கனவுத் திட்டமான மங்கள்யானை சித்தரிக்கிறது

Posted On: 28 NOV 2022 6:17PM by PIB Chennai

யானம் திரைப்படம் கோவாவில் நடைபெறும் 53வது சர்வதேச திரைப்பட விழாவின் இந்தியன் பனோரமா பிரிவின் கீழ் கதை அல்லாத திரைப்படம் ஆகும். இது விண்வெளித் துறை முன்னாள் தலைவர் பத்ம பூஷன் டாக்டர் கே. ராதாகிருஷ்ணனின் சுயசரிதை புத்தகமான “மை ஒடிஸி: மங்கள்யான் மிஷன் பின்னால் இருக்கும் மனிதனின் நினைவுகள்”ஐ  (My Odyssey: Memoirs of the Man Behind the Mangalyaan Mission )அடிப்படையாகக் கொண்டது.

யாணம் திரைப்படம் இந்தியாவின் கனவுத் திட்டமான செவ்வாய் சுற்றுகலன் திட்டம் (மங்கள்யான்) பற்றி சித்தரிக்கிறது. உலக சினிமா வரலாற்றில் சமஸ்கிருத மொழியில் எடுக்கப்பட்ட முதல் அறிவியல் ஆவணப்படம் இது. இது இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (ISRO) திறன் மற்றும் நிபுணத்துவம், விண்வெளி விஞ்ஞானிகளின் ஈடுயினை இல்லா பங்களிப்பு மற்றும் சமஸ்கிருத மொழியின் முக்கியத்துவம் ஆகியவற்றைக் காட்டுகிறது. கடினமான கிரகங்களுக்கு இடையேயான பயணத்த்தில் முதல் முயற்சியிலேயே இந்தியா எவ்வாறு ஒரு மகத்தான வெற்றியை கண்டது என்பதை இது எடுத்துக்காட்டுகிறது.

படத்தின் தயாரிப்பாளர் ஏ.வி.அனூப் கூறுகையில், “ஐஎஃப்எஃப்ஐயில் இந்தியன் பனோரோமா பிரிவில் உள்ள அனைத்து வகையிலும் எனது படங்கள் திரையிடப்பட்டடுள்ளது என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். கடந்த முறை நான் முழு நீலத் திரைப்படம் மற்றும் ஒரு குறும்படத்தைதிரையிட்டேன்.  இந்த ஆண்டு நான் கதை அல்லா படத்தை வழங்குகிறேன்.” என்று கூறினார்.

இஸ்ரோவுடன் இணைந்து பணிபுரிந்த அனுபவம் குறித்து பேசிய அவர், இஸ்ரோ இந்தியாவின் பெருமை. இஸ்ரோவிடம் அனுமதி கேட்டு கடிதம் எழுதினோம். தற்போதைய தலைவராக உள்ள டாக்டர். எஸ். சோமநாத் கடிதங்களைப் பார்த்ததும், எங்களை அழைத்து இதை நாம் கண்டிப்பாக செய்கிறோம் என்றார். எங்கள் கோரிக்கையை இஸ்ரோ ஏற்றுக்கொண்டது எங்கள் அதிர்ஷ்டம். கேரளாவில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையம், ஆந்திராவில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா, கர்நாடகாவில் உள்ள இஸ்ரோ தலைமையகம் மற்றும் தமிழ்நாட்டின் பழமையான கண்காணிப்பு மையம் என 4 தென் மாநிலங்களில் வெவ்வேறு இடங்களில் படத்தைப் படமாக்கியுள்ளோம். எல்லா இடங்களிலும் படப்பிடிப்பு நடத்த எங்களுக்கு அனுமதி கிடைத்தது. மங்கள்யான் திட்டத்தின் போது அவர்கள் பயன்படுத்திய அனைத்து பொருட்களையும் அவர்கள் எங்களுக்கு படமெடுக்க வழங்கினர், என்று அவர் மேலும் கூறினார்.

"கிட்டத்தட்ட ஒவ்வொரு வாரமும், உலகெங்கிலும் உள்ள பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடுவதற்காக இத்திரைப்படம்  தேர்ந்தெடுக்கப்படுகிறது " என்று கூறி அவர் தனது உரையாடலை முடித்தார்.

************

GS / SRI / DL



(Release ID: 1879660) Visitor Counter : 115