புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்

இந்திய புதுப்பிக்கவல்ல எரிசக்தி மேம்பாட்டு முகமை (ஐஆர்இடிஏ) ‘அரசியலமைப்பு தினத்தை’ க் கொண்டாடியது

Posted On: 27 NOV 2022 2:50PM by PIB Chennai

இந்திய புதுப்பிக்கவல்ல  எரிசக்தி மேம்பாட்டு முகமை லிமிடெட் (ஐஆர்இடிஏ) அரசியலமைப்பு தினத்தை நேற்று கொண்டாடியது. "இந்திய அரசியலமைப்பு, இந்தியாவின் சிந்தனை" என்ற தலைப்பில் இணையவழி கருத்தரங்கிற்கும்  ஏற்பாடு செய்திருந்தது. அரசியலமைப்பின் முக்கியத்துவத்தை பரப்பவும், இந்திய அரசியலமைப்பின் தந்தை திரு  பி.ஆர்.அம்பேத்கரின் சிந்தனைகள் மற்றும் கருத்துக்களை பரப்பவும் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26 அன்று   "தேசிய சட்ட தினம்" அல்லது "சம்விதான் திவாஸ்" என்றும்  அழைக்கப்படும் அரசியலமைப்பு தினம் கொண்டாடப்படுகிறது.

“அரசியலமைப்பு தினத்தைக் கொண்டாடுவதன் உண்மையான உணர்வு, அரசியலமைப்பில் பொதிந்துள்ள நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றில் நான்கு மடங்கு லட்சியங்களை உள்வாங்கி செயல்படுத்துவதில் உள்ளது. நமது தனிப்பட்ட மற்றும் தொழில்முறை  வாழ்க்கையிலும் இந்தக் கொள்கைகளை நாம் தொடர்ந்து கடைப்பிடித்து, இந்த உணர்விற்கு உண்மையாக இருந்தால், அரசியலமைப்புச் சட்டம் இந்தியாவுக்கு எல்லாக் காலங்களிலும் சேவை செய்ய முடியும்" என்று காணொலி காட்சி மூலம் நிகழ்த்திய உரையில் இந்திய புதுப்பிக்கவல்ல  எரிசக்தி மேம்பாட்டு முகமையின் தலைவர் தெரிவித்தார்.  

இந்த இணையவழி கருத்தரங்கில் இந்திய புதுப்பிக்கவல்ல  எரிசக்தி மேம்பாட்டு முகமையின் இயக்குநர் (தொழில்நுட்பம்)  மற்றும் பிற அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரை குறித்த உறுதிமொழி ஏற்கப்பட்டதைத் தொடர்ந்து இணையவழி கருத்தரங்கு நடைபெற்றது.

**************

SM / SMB / DL



(Release ID: 1879357) Visitor Counter : 142