ஜவுளித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2022, நவம்பர் 28 திங்களன்று தலைசிறந்த கைவினைகலைஞர்களுக்கு ஷில்ப் குரு மற்றும் தேசிய விருதுகளைக் குடியரசு துணைத்தலைவர் வழங்கவிருக்கிறார்

Posted On: 27 NOV 2022 12:38PM by PIB Chennai

2022, நவம்பர் 28  திங்களன்று, 2017, 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளின்  தலைசிறந்த கைவினைகலைஞர்களுக்கான ஷில்ப் குரு மற்றும் தேசிய விருதுகளை வழங்க மத்திய ஜவுளி அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.

விருது வழங்கும் விழாவில் மாண்புமிகு குடியரசு துணைத் தலைவர் திரு ஜகதீப் தன்கர் தலைமை  விருந்தினராகக் கலந்துகொள்வார். மத்திய ஜவுளி, நுகர்வோர் நலன், உணவு, பொது விநியோகம் மற்றும் தொழில் வர்த்தகத் துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் விழாவிற்குத்  தலைமை தாங்குவார். . இந்நிகழ்ச்சியில் ரயில்வே மற்றும் ஜவுளித்துறை இணை அமைச்சர்  திருமதி தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்வார்.

தலைசிறந்த கைவினை கலைஞர்களுக்கான தேசிய விருதுகள் வழங்கும் திட்டத்தை 1965 ஆம் ஆண்டு முதல் மேம்பாட்டு  ஆணையர் அலுவலகம் (கைவினைப் பொருட்கள்)  செயல்படுத்தி வருகிறது. 2002 ஆம் ஆண்டு ஷில்ப் குரு விருதுகள் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் கைவினைப் பொருட்கள் தொழிலில் நாட்டின் வளமான மற்றும் பன்முகக் கைவினைப் பாரம்பரியத்தைப் பாதுகாப்பது   மட்டுமின்றி , ஒட்டுமொத்த கைவினைத் துறையின் மறுமலர்ச்சிக்கும் பங்களிப்பு செய்யும் சிறந்த கைவினை கலைஞர்களுக்கு  வழங்கப்படுகின்றன. . கைவினைத் துறையில் சிறந்து விளங்கும்   கைவினை கலைஞர்களுக்கு  அங்கீகாரம் வழங்குவது இதன்  முக்கிய நோக்கமாகும். விருது பெறுபவர்கள் நாட்டின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களையும், வெவ்வேறு பகுதிகளின் வெவ்வேறு கைவினைப் பாணிகளையும் பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

பெருந்தொர்று காரணமாக, கடந்த மூன்று ஆண்டுகளுக்கான விருதுகள் ஒன்றாக வழங்கப்படுகின்றன.

நாட்டின் பொருளாதாரத்தில் கைவினைத் துறை குறிப்பிடத்தக்க மற்றும் முக்கியப்  பங்கு வகிக்கிறது. இது கிராமப்புறங்களிலும் சிறு நகரங்களிலும் பெருமளவிலான கைவினைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது; நாட்டிற்குக்  கணிசமான அந்நியச் செலாவணியை உருவாக்குகிறது. அதே நேரத்தில்  கலாச்சார பாரம்பரியத்தையும்  பாதுகாக்கிறது. வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் ஏற்றுமதியில் கைவினைப் பொருட்கள் துறை தொடர்ந்து கணிசமான பங்களிப்பை செய்துவருகிறது.

**************

SM / SMB / DL


(Release ID: 1879306) Visitor Counter : 200