தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav
iffi banner

புகழ்பெற்ற அனிமேட்டர் டாக்டர் கிறிஸ்டியன் ஜெஸ்டிக் அனிமேஷன் பற்றி விளக்கம்

"அனிமேஷன் தொடருக்கான திரைக்கதை எழுதுவது புத்தகங்களில் பயன்படுத்தப்படும் திரைக்கதை மொழியிலிருந்து மிகவும் வித்தியாசமானது " என்று டாக்டர் கிறிஸ்டியன் ஜெஸ்டிக் கூறினார். 53வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் மாஸ்டர் கிளாஸில் உரையாற்றிய அவர், அனிமேஷன் ஷோ தயாரிப்பதற்கு ஆகும் செலவு மிக அதிகம் என்று  தெரிவித்தார். 26 நிமிட அனிமேஷன் நிகழ்ச்சிக்கு 7-10 மில்லியன் டாலர்கள் செலவாகும் என்று அவர் கூறினார்.

வீடியோ கேம்ஸ், விஎஃப்எக்ஸ், அனிமேஷன் துறையில் பரிணாம வளர்ச்சியை விளக்கிய டாக்டர் ஜெஸ்டிக் கூறுகையில், இது ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் மட்டுமல்லாமல், இந்தியாவிலும் பாரம்பரிய தொழில்துறையை மாற்றுகிறது என்றார். 

அனிமேஷன் டிவி தொடரை உருவாக்குவதற்கான ஆலோசனைகளையும் அவர் வழங்கினார்.

**************

SM / PKV / DL

iffi reel

(Release ID: 1878974) Visitor Counter : 169