வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க இந்திய –வளைகுடா ஒத்துழைப்புக் கவுன்சில் முடிவு

Posted On: 25 NOV 2022 9:09AM by PIB Chennai

தடையற்ற  வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க இந்திய – வளைகுடா ஒத்துழைப்புக் கவுன்சில் முடிவு செய்திருப்பதாக புதுதில்லியில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில், மத்திய வர்த்தகம், தொழில், நுகர்வோர் நலன், உணவு, பொதுவிநியோகம், ஜவுளித்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் மற்றும் கவுன்சிலின் பொதுச் செயலாளரான மேன்மைதங்கிய டாக்டர் நையீப் ஃபல்லா எம் அல்-ஹஜ்ரஃப் கூட்டாக அறிவித்துள்ளனர்.

இருநாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் சம்பந்தப்பட்ட ஒப்பந்தங்களின் முன்னெடுப்புகள், தீர்வு ஏற்படும் வகையிலான பேச்சுவார்த்தைகள், இருநாட்டு சந்திப்புகள் போன்றவைகள் முக்கியத்துவம் பெறும். சரக்குகள் மற்றும் சேவைகள் தொடர்பான நவீன, முழுமையான ஒப்பந்தங்களை ஏற்படுத்துவதுதான் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் நோக்கமாகும். இதன் விளைவாக இந்தியா மற்றும் வளைகுடா நாடுகளிடையே புதிய வேலைவாய்ப்புகள், வாழ்க்கைத்தரம் மேம்பாடு அடைதல், சமூகப் பொருளாதார வாய்ப்புகள் ஏற்படும்.

வளைகுடா ஒத்துழைப்புக் கவுன்சில் தான் தற்போது இந்தியாவின் வர்த்தக ரீதியிலான மிகப்பெரிய பங்குதாரர். இந்த 2021-22 நிதியாண்டில் வர்த்தகம் தொடர்பான நடவடிக்கைகளுக்கு, அமெரிக்க டாலர் மதிப்பில், 154 பில்லியனாகும்.  அதில் ஏற்றுமதிக்கு மட்டும் அமெரிக்க டாலர் மதிப்பில் 44 பில்லியன் மற்றும் இறக்குமதிக்கு  அமெரிக்க டாலர் மதிப்பில் 110 பில்லியன் அடங்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1878714

                                                      ------
AP/GS/KPG/KRS


(Release ID: 1878747) Visitor Counter : 216