மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

‘காசி தமிழ் சங்கமம்’ 5வது நாளில் 2வது தொகுப்பு தமிழ் பிரதிநிதிகள் காசியின் பாரம்பரியம், கலை மற்றும் கலாச்சாரம் பற்றிய நேரடி அனுபவத்தைப் பெற்றனர்

‘ஹனுமன் படித்துறை’ , சுப்ரமணிய பாரதியின் இல்லம், வர்த்தக வசதி மையத்தில் அருங்காட்சியகம், சாரநாத் பார்வையிடல் மற்றும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் ஆம்பி தியேட்டரில் கலாச்சார நிகழ்ச்சிகள் இன்றைய முக்கிய ஈர்ப்புகளாகும்

Posted On: 23 NOV 2022 2:47PM by PIB Chennai

ஒரு மாத கால ‘காசி தமிழ் சங்கமம்’  திருவிழாவில் கலந்து கொள்ள தமிழ்நாட்டிலிருந்து வந்துள்ள  இரண்டாவது குழுவினர், அதிகாலையில் கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள ‘ஹனுமன் படித்துறையில் ’   புனித நீராடினர். ஏற்கனவே  'ராமேஸ்வரம் படித்துறை' என்று அழைக்கப்பட்ட 'ஹனுமான் படித்துறை' வாரணாசியில் அதிகம் பார்வையிடப்பட்ட படித்துறைகளில் ஒன்றாகும். இதனைச் சுற்றியுள்ள பகுதிகள்  கேரளா மடம், காஞ்சி மடம், சங்கர மடம், சிருங்கேரி மடம் போன்ற தென்னிந்திய மடங்களுடன் அடர்த்தியான மக்கள் தொகையைக் கொண்டுள்ளன.

புனித நீராடலுக்குப் பிறகு, தூதுக்குழுவினர் 'ஹனுமன் படித்துறையில்' உள்ள சுப்ரமணிய பாரதியின் இல்லத்திற்குச் சென்றனர். தூதுக்குழுவின் உறுப்பினர்கள் தங்களின் பழக்கவழக்கங்கள், மரபுகள் மற்றும் கலாச்சாரத்துடன் இவற்றைத் தொடர்புபடுத்த முடியும் என்பதால் தங்கள் நன்றியைத் தெரிவித்தனர்.

தமிழ்த் தூதுக்குழுவின் இரண்டாவது தொகுப்பில் கைவினைஞர்கள் மற்றும் வர்த்தகர்கள் அடங்கிய குழுவும் இருந்தது. அவர்கள் வர்த்தக வசதி மையத்தில் அமைந்துள்ள அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டு முதல் அனுபவத்தைப் பெற்றனர். இந்த அருங்காட்சியகத்தில், பூர்வாஞ்சல் பகுதி முழுவதிலும் உள்ள கைத்தறி பொருட்களின் சிறப்பும், சாரநாத் தொல்பொருட்களின் மாதிரிகளும்  விருந்தினர்களுக்கு காட்சிப்படுத்தப் பட்டிருந்தன. வருகை தந்த தூதுக்குழுவினருக்காக வர்த்தக வசதி மையத்தில் ஒரு கலாச்சார நிகழ்ச்சிக்கும்  ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் சில உறுப்பினர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். கலாச்சார நிகழ்ச்சிக்குப் பின், பகலில், அவர்கள் சாரநாத்திற்கு சுற்றுலாவாக  அழைத்துச் செல்லப்பட்டனர்.

மாலையில் தூதுக்குழுவினர்  சாரநாத்திலிருந்து BHU ஆம்பி தியேட்டரை அடைந்து கலாச்சார நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வார்கள். மைதானத்தில் உள்ள பல்வேறு கடைகளையும் அவர்கள் பார்வையிடுவார்கள். 75 கடைகளில் வட இந்திய மற்றும் தென்னிந்திய அங்காடிகள் உள்ளன. இவற்றில் கலைப்பொருட்கள், கைத்தறி, கைவினைப்பொருட்கள், பாரம்பரிய உடைகள், வட இந்திய மற்றும் தென்னிந்திய உணவுகள் போன்றவை பிரதிநிதிகள் மற்றும் வாரணாசியின் உள்ளூர் மக்களுக்காக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

******

(Release ID: 1878234)



(Release ID: 1878339) Visitor Counter : 111