கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்துடன் இணைந்து ஜவகர்லால் நேரு துறைமுகத்தில் கடல் நீரின் தரத்தை கண்காணிக்கும் நிலையம் தொடங்கப்பட்டுள்ளது

Posted On: 23 NOV 2022 11:20AM by PIB Chennai

இந்தியாவின் சிறந்த செயல்பாடு கொண்ட துறைமுகமான ஜவகர்லால் நேரு துறைமுகம், சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் கட்டிட பொறியியல் துறையுடன் இணைந்து கடல் நீரின் தரத்தைக் கண்காணிக்கும் நிலையம் மற்றும் சுற்றுச்சூழலைக் கண்காணிக்கும் மின்சார வாகனத்தை நவம்பர் 21-ஆம் தேதி துறைமுகத்தில் அறிமுகப்படுத்தியது. துறைமுகத்தின் துணைத் தலைவர் திரு உன்மேஷ் ஷரத் வாக் முன்னிலையில் அதன் தலைவர் திரு சஞ்சய் சேத்தி கண்காணிப்பு நிலையத்தையும், வாகனத்தையும் தொடங்கி வைத்தார்.

விழாவில் பேசிய திரு சஞ்சய் சேத்தி, நிலைத்தன்மையில் முன்னிலை வகிக்கவும், பொருளாதாரம், சமூகம் மற்றும் சுற்றுச்சூழல் அளவுருக்களில் வர்த்தகத்திற்கு மதிப்பை உருவாக்குவதிலும் ஜவகர்லால் நேரு துறைமுகம் உறுதி பூண்டிருப்பதாகத் தெரிவித்தார். தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள முன்முயற்சிகள், நிலையான வளர்ச்சியை நோக்கிய உறுதிப்பாட்டின் முக்கிய நடவடிக்கைகள், என்றார் அவர்.

கடல் நீரின் தரத்தை கண்காணிக்கும் அமைப்புமுறையும், கண்காணிப்பு வாகனமும் துறைமுகத்தில் சுற்றுச்சூழலின் தரத்தை ஒழுங்குபடுத்தி, கடல்நீர் மற்றும் காற்றின் தர மேலாண்மையில்  உதவிகரமாக இருக்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1878176

**************

 (Release ID: 1878176)(Release ID: 1878231) Visitor Counter : 48