தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
53வது சர்வதேச திரைப்பட விழாவில் இளம் சுதந்திர போராட்ட வீரரான குதிராம் போஸின் வாழ்க்கை வரலாறு திரைப்படம்
இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தின் இளம் தியாகிகளில் ஒருவரான குதிராம் போஸின் வாழ்க்கை வரலாறு சித்தரிக்கும் தெலுங்குத் திரைப்படம் இந்திய பனோரமா பிரிவின் கீழ் இன்று 53வது சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டுள்ளது.
இயக்குனர் வித்யா சாகர் ராஜு தனது மூன்றாவது திரைப்படத்தில் ஒரு வாழ்க்கை வரலாற்றை எடுக்க தேர்வு செய்தார், அதற்கான காரணம் "குதிராம் பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்", என்று அவர் கூறினார்.
சர்வதேச திரைப்பட விழாவின் ஒரு பகுதியாக நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசிய இயக்குனர் வித்யா சாகர் ராஜு, திரைக்கதையை உருவாக்கும் முன் தீவிர ஆராய்ச்சியை மேற்கொள்ள வேண்டியிருந்தது என்றார்.
"குதிராமின் வரலாற்றை எங்கள் குழு ஆராய்ந்தபோது, அவரைப்பற்றி திரையில் காட்சிசெய்ய நிறைய விஷயங்கள் இருப்பதை அறிந்துக்கொண்டோம் ", என்றார் வித்யா சாகர் ராஜு. “வங்காளத்தில் நடந்த பிரிவினையினால் ஏற்பட்ட பயங்கரங்களை இத்திரைப்படம் சித்தரித்துள்ளது. இதில் பல வரலாற்று கதாபாத்திரங்கள் ஈடுபட்டுள்ளன.”, என்று கூறினார்.
தனது முதல் படத்திலேயே சுதந்திரப் போராட்ட வீரராக நடித்தது மகிழ்ச்சியாக இருந்தது என்றார் அறிமுக நடிகர் ராகேஷ் ஜக்ரலாமுடி. வரலாற்று நிஜ வாழ்க்கை கதாபாத்திரத்தை சித்தரிப்பது அவருக்கு கொஞ்சம் சவாலாக இருந்தது ஆனால் தனது திரைப்படக் குழுவு அதை எளிதாக செய்ய உதவியது, என்றார் அவர்.
இயக்குனர் மேலும் கூறியபோது, நமது நாடு சுதந்திரத்தின் பெருவிழாவை கொண்டாடத் தொடங்கியபோது, நமது மரியாதைக்குரிய சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பற்றிய திரைப்படம் எடுக்க நினைத்தோம். "பின்னர் நாங்கள் குதிராமுடன் எங்கள் பயணத்தைத் தொடங்கினோம்", என்று கூறினார்.
ஏழு இந்திய மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின்போது நாடாளுமன்ற வளாகத்தில் இத்திரைப்படத்தின் இந்தி பதிப்பை திரையிட குழு திட்டமிட்டுள்ளது.
**************
PKV/MSV/DL
(Release ID: 1878112)