சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்

அதிகளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்ற பிரதமரின் நோக்கத்தை அடைவதற்கு நாடு முழுவதிலும் 45 இடங்களில் பணி நியமனம் வழங்கும் மாபெரும் திட்டம் செயலாக்கம்

Posted On: 22 NOV 2022 1:39PM by PIB Chennai

பணி நியமனம் வழங்கும் மாபெரும் திட்டத்தின்கீழ், இரண்டாம் கட்டமாக 71,000 பேருக்கு காணொலி காட்சி மூலம் பிரதமர் திரு.நரேந்திர மோடி பணி நியமன ஆணைகளை வழங்கினார். இந்த திட்டத்தின்கீழ், நாடு முழுவதிலும் 45 இடங்களில், தகுதி வாய்ந்தவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது.

புதுதில்லியில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படை அலுவலகத்தில் நடைபெற்ற பணி நியமன ஆணைகள் வழங்கும் மாபெரும் திட்டத்தின் கீழ், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் திரு.எஸ்.பி.சிங் பாகல் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

அந்த நிகழ்வில் மத்திய இணையமைச்சர் பேசும்போது, “பிரதமர் திரு.நரேந்திர மோடியின் சீரிய தலைமையின் கீழ், பணி நியமனம் வழங்கும் மாபெரும் திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது என்றார்.

நம் நாட்டிற்கு சேவை செய்வதற்காக உங்களுக்கு மிகச்சிறந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. அதனை நன்கு பயன்படுத்தி உயர் பதவிகளில் அமர்ந்து நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார்.

இந்த நிகழ்வில் 224 தகுதி வாய்ந்த நபர்கள் இடம்பெற்றிருந்தனர். தகுதி வாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பாதுகாப்பு, நிதி, கல்வி, சுகாதாரம், ரயில்வே, உள்துறை, மின்சாரம் மற்றும் நீர் ஆதாரம் போன்ற துறைகளில் பணியமர்த்தப்படுவார்கள்.

**************

SG/GS/KG/KRS



(Release ID: 1878039) Visitor Counter : 124