தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
திரைப்பட படப்பிடிப்பு, படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகளுக்கு அனைவரும் விரும்பும் நாடாக இந்தியா உருவெடுக்கும்: அனுராக் தாக்கூர்
திரைப்பட படப்பிடிப்பு, தொழில்நுட்பத்தை பயன்படுத்துவோரின் ஒத்துழைப்புடன் நடைபெறும் படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகள் ஆகியவற்றுக்கு அனைவரும் விரும்பும் மையமாக இந்தியா மாறும் என மத்திய தகவல், ஒலிபரப்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் உறுதிபடத் தெரிவித்துள்ளார். கோவா மாநிலத்தின் பனாஜியில் 53-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவை அவர் தொடங்கிவைத்தார்.
ஒவ்வொரு ஆண்டும், திருவிழா பெரிதாகி வருகிறது. இந்த ஆண்டு பல பிரீமியர்கள் உள்ளன. இந்த ஆண்டு விழாவில் 79க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 280 படங்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன. இது வரை நாம் என்ன செய்துள்ளோம் என்பதைப் பற்றி விழா விரிவாகப் பேசுகிறது என்று தொடக்க விழாவில் உரையாற்றிய அவர் கூறினார்.
“இந்த திரைப்பட விழாவுக்கான எனது பார்வை ஒரு நிகழ்வோடு மட்டும் நின்றுவிடுவதில்லை, மாறாக, அமிர்தப் பெருவிழாவிலிருந்து அமிர்த காலத்துக்கு மாறும்போது, இந்தியா சுதந்திரத்தின் 100வது ஆண்டைக் கொண்டாடும் போது, இத்திரைப்பட விழா எப்படி இருக்க வேண்டும் எனப்தை நோக்கமாகக் கொண்டதாகும். பிராந்திய படங்களுக்கான திரைப்பட விழாக்களை அதிகரிப்பதன் மூலம் இந்தியாவை அனைவரையும் உள்ளடக்கிய படைப்பாற்றல் மையமாக மாற்றுவதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம்,” என அவர் தெரிவித்தார்.
1952 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து, இந்திய சர்வதேச திரைப்பட விழா, உலகமே ஒரே குடும்பம் என்னும் கருப்பொருளில் வேரூன்றி உள்ளது, இது அமைதியான கூட்டுறவின் சாரத்தை உள்ளடக்கியது என்றார். "இந்தியாவின் அதிகரித்து வரும் உலகளாவிய பங்கு, ஜி20 தலைமைப் பொறுப்பு ஆகியவை, பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் 'ஒரே பூமி, ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம்' என்ற இந்த கருப்பொருளைச் சுற்றி வருகிறது." என்று அவர் தெரிவித்தார்.
சத்யஜித் ரே வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள ஸ்பெயின் நாட்டு இயக்குனர் கார்லஸ் சவ்ராவை அமைச்சர் பாராட்டினார். இந்த ஆண்டின் இந்திய திரைப்பட ஆளுமை விருது நடிகர் சிரஞ்சீவிக்கு வழங்கப்படும் என்றும் அவர் கூறினார். மணிப்பூர் சினிமாவின் 50 ஆண்டுகளை கொண்டாடும் வகையில், மணிப்புரி மொழியில் திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தொடக்க விழாவிற்கு முன் ஒரு தொடக்கப் படம் திரையிடப்படுவது இதுவே முதல் முறை என்று அமைச்சர் குறிப்பிட்டார். 75 நாளைய இளம் படைப்பாளர்கள் முன்முயற்சியிலிருந்து உலக பிரீமியர்கள் வரை, ஒவ்வொரு ஆண்டும் நாங்கள் வித்தியாசமான ஒன்றைச் செய்ய முயற்சிக்கிறோம். சர்வதேச திரைப்பட வல்லுநர்களின் பங்கேற்பை எதிர்பார்க்கிறோம் என்று அமைச்சர் கூறினார்.
**************
(Release ID: 1877567)
MSV/PKV/AG/RR
(Release ID: 1877712)
Visitor Counter : 183