தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
iffi banner

53-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் இந்த ஆண்டுக்கான திரைப்பட ஆளுமை விருது மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு வழங்கப்படுகிறது

நடிகரும், தயாரிப்பாளருமான மெகா ஸ்டார் சிரஞ்சீவி கொனிடேலா, இந்த ஆண்டுக்கான ஐஎஃப்எஃப்ஐ-ன்  திரைப்பட ஆளுமை விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  கோவாவில் 53-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவை தொடங்கிவைத்து உரையாற்றிய மத்திய தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர் இதனை அறிவித்தார்.

இந்திய சர்வதேச திரைப்பட விழா தொடக்க நிகழ்ச்சியில், மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகனுடன் இணைந்து அமைச்சர் இந்த விருதினை அறிவித்தார். திரைப்பட உலகுக்கு அவர் ஆற்றியுள்ள பங்களிப்பு, சமூக ரீதியிலான கலாச்சார, கலைப்பணி ஆகியவற்றுக்காக அவர் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள சிரஞ்சீவிக்கு பாராட்டு தெரிவித்துள்ள மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர், 40 ஆண்டுகளுக்கும் மேலாக சிரஞ்சீவி, 150-க்கும் மேற்பட்ட  படங்களில் நடித்து மக்களின் மனதை கவர்ந்துள்ளார் என்று கூறினார்.  தெலுங்கு திரைப்பட உலகில் அவர் மிகுந்த செல்வாக்கு பெற்று விளங்குவதாக அமைச்சர் கூறினார்.

40 ஆண்டுகளுக்கு மேலாக தெலுங்கு மொழியில் 150-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள சிரஞ்சீவி, இந்தி, தமிழ், கன்னட மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கு திரைப்பட உலகில் மிகவும் வெற்றிகரமான செல்வாக்குமிக்க நடிகர்களில் அவரும் ஒருவராவார்.

 1982-ம் ஆண்டு வெளியான ‘இன்டிலோ ராமய்யா வீதிலோ கிருஷ்ணய்யா’ என்ற திரைப்படத்தின் மூலம் அவர் மக்களை கவர்ந்தார். நடன காட்சிகளிலும், சண்டை காட்சிகளிலும் அவரது நடிப்பு அனைவரையும் கவர்ந்தது.  மெகா ஸ்டார் என்ற பட்டத்தையும் அவர் பெற்றுள்ளார்.

2006-ம் ஆண்டு இந்தியாவின் 3-வது உயரிய விருதான பத்மபூஷண் விருது அவருக்கு வழங்கப்பட்டது.

வஹீதா ரஹ்மான், ரஜினிகாந்த், இளையராஜா, எஸ்.பி. பாலசுப்பிரமணியம், அமிதாப் பச்சன், சலீம் கான், பிஸ்வஜித் சட்டர்ஜி, ஹேமமாலினி, பிரசூன் ஜோஷி ஆகியோர் இந்த விருதை பெற்றுள்ளனர்.

**************


(Release ID: 1877556)

MSV/PKV/AG/RR

iffi reel

(Release ID: 1877674) Visitor Counter : 170