மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
உலக மீன்வள தினம் டாமானில் நாளை கொண்டாடப்படுகிறது
Posted On:
20 NOV 2022 11:28AM by PIB Chennai
மீன்வளத் துறை, மத்திய மீன்வளம், கால்நடை வளர்ப்பு மற்றும் பால்வள அமைச்சகம் மற்றும் தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம் ஆகியவை இணைந்து 21 நவம்பர் 2022 அன்று டாமனில் உள்ள சுவாமி விவேகானந்தர் அரங்கத்தில் ‘உலக மீன்வள தினத்தை’ கொண்டாடுகின்றன.
இந்த நிகழ்வின் போது, கடந்த மூன்று ஆண்டுகளில் 2019-20 முதல் 2021-22 வரை சிறப்பாக செயல்பட்ட மாநிலங்கள்/மாவட்டங்கள் மற்றும் மீன் வளம் சார்ந்த நடவடிக்கைகளில் சிறப்பாக செயல்பட்ட பல்வேறு நிறுவனங்களுக்கு பாராட்டும், விருதும் அளிக்கப்படும்.
மீன்பிடித் துறையை பல்வேறு வகையில் மேம்படுத்தும் நடவடிக்கைகளில் மத்திய அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகின்றது. நாட்டில் நீலப் புரட்சி மூலம் நிலையான மீன்வளம், மீன்வளர்ப்பு மற்றும் பொருளாதார புரட்சியை ஏற்படுத்துகிறது. மீன்வளர்ப்பை தீவிரப்படுத்துதல், விரிவுபடுத்துதல், மேம்படுத்துதல் மற்றும் மீன்வள மேலாண்மையை மேம்படுத்துதல் போன்றவற்றின் மூலம் விவசாயிகளின் வருவாயை அதிகரிக்க இந்தத் துறை திட்டமிட்டுள்ளது. கடந்த 2020 ஆண்டு மே மாதம் பிரதமர், “பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா (பிஎம்எம்எஸ்ஒய்) என்ற திட்டத்தை ரூ. 20,050 கோடி மதிப்பீட்டில் தொடங்கி வைத்தார். இந்த திட்டம், வரும் 2024-25 ஆம் ஆண்டில் மீன் உற்பத்தியை தற்போதைய 13.76 மில்லியன் மெட்ரிக் டன்னில் இருந்து 22 மில்லியன் மெட்ரிக் டன்னாக அதிகரித்து, இந்தத் துறையின் மூலம் சுமார் 55 லட்சம் கூடுதலாக வேலை வாய்ப்பை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா, மற்றும் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் டாக்டர். சஞ்சீவ் குமார் பல்யான், மத்திய மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர், டாக்டர். எல்.முருகன் மற்றும் அரசுத்துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள், மற்றும் இதன் தொடர்புடைய துறைகள்/அமைச்சகங்கள், மீன்-விவசாயிகள், மீனவர்கள், தொழில்முனைவோர், பங்குதாரர்கள், கல்வியாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள்.
*********
MSV/GS/DL
(Release ID: 1877511)
Visitor Counter : 195