தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
மணிப்பூரி சினிமாவின் பொன்விழா ஆண்டைக் கொண்டாடும் 53வது இந்திய சர்வதேச திரைப்பட விழா (ஐஎப்எப்ஐ)
53வது இந்திய சர்வதேச திரைப்பட விழா (ஐஎப்எப்ஐ) கொண்டாட்டங்களின் பாரம்பரிய தொடக்கமாக பொன்விழா கண்ட மணிப்பூரி திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. மணிப்பூர்- 'இந்தியாவின் நகை நகரம்' ஆகும். வடகிழக்கு மாகாணத்தின் ஒரு முக்கிய அங்கமான மணிப்பூர், நமது நாட்டின் கலைத்துறையின் பெருமைகளை பறைசாற்றும் விதமாக மணிப்பூரி திரைப்படங்களை திரையிடுகின்றது.
மணிப்பூரி சினிமாவின் பொன்விழா ஆண்டைக் கொண்டாடும் வகையில், ஆசியாவின் மிகத் தொன்மையான திரைப்பட விழாவான 53வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் ஒரு முக்கிய அங்கமான இந்தியன் பனோரமாவின் கீழ் மணிப்பூர் மாநில திரைப்பட மேம்பாட்டுச் சங்கத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து ஃப்பீச்சர் பிலிம்ஸ் (முழுநீளத் திரைப்படங்கள்) மற்றும் ஐந்து நான்-ஃப்பீச்சர் பிலிம்ஸ் (முழுநீளத் திரைப்படங்கள் அல்லாத) திரைப்படங்களைக் காண்பிக்கப்படும்.
கடந்த 1972 ஆம் ஆண்டு ஏப்ரல் 9 ஆம் தேதி அன்று தேப் குமார் போஸ் இயக்கிய ‘மாதங்கி மணிப்பூர்’ எனும் மணிப்பூரி திரைப்படம் வெளியானதிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 9 ஆம் தேதி மணிப்பூரி சினிமாவின் தோற்றமாகக் கொண்டாடப்படுகிறது.
பத்மஸ்ரீ விருது பெற்ற இயக்குனர் அரிபம் ஷியாம் சர்மாவின் ‘இஷானோ’ முழுநீளத் திரைப்படங்கள் பிரிவிலும் ரத்தன் தியாம் இயக்கிய ‘தி மேன் ஆஃப் தியேட்டர்’ முழுநீளத் திரைப்படங்கள் அல்லாத திரைப்படங்கள் பிரிவிலும் திரையிடப்படும். சினிமா ஆர்வலர்கள் மணிப்பூர் மாநிலத்தின் வளமான கலாச்சாரம், பாரம்பரியம், சிறந்த கதைசொல்லல், நடனம், இசை, மரபுகள் போன்றவற்றைக் கண்டுகளிப்பர்.
மணிப்பூரி திரைப்பட முன்னோடிகளான அரிபம் ஷ்யாம் சர்மா, ஓகென் அமக்சம், நிர்மலா சானு, போருன் தோக்சோம், ரோமி மெய்தி உள்ளிட்ட பலர் மணிப்பூரி சினிமாவின் 50 ஆண்டுகால நீண்ட நெடிய கலைப்பயணத்தை கொண்டாடும் வகையில் 53வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் ஒன்று கூடியிருப்பது சிறப்பு.
அரிபம் ஷியாம் சர்மா இயக்கிய ‘இஷானோ’ திரைப்படம் தம்பா என்ற கதாநாயகி, அவரது கணவர் மற்றும் குழந்தைகளை சுற்றி வருகிறது. மைபிஸ் என்ற தாய்வழி மதப்பிரிவில் தன்னைத் தேர்ந்தெடுத்ததாக நினைக்கும் தம்பா, மைபி குருவைத் தேடி தனது குடும்பத்தை விட்டு வெளியேறியதால், ஏற்பட்ட திடீர் மாற்றத்தால் அவர்களின் வாழ்க்கை சீர்குலைகிறது.
எஸ்.என் சந்த் சஜாதி இயக்கத்தில் ‘ப்ரோஜேந்திரா’ திரைப்படத்தில், ஒரு மருத்துவர், தனது தாயின் விருப்பப்படி ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார். ஆனால் திருமணத்திற்குப் பிறகும் மனைவியின் முகத்தைப் பார்க்க அவர் மறுத்துவிடுகிறார். பின்னர், ஒரு இசை நிகழ்ச்சியில், அவர் ஒரு அழகான பெண்ணை சந்திக்கிறார். இருவரும் தங்களது அன்பை பார்வைகளால் பரிமாறிக் கொள்கின்றனர். அவர் குற்ற உணர்ச்சியுடன் வீடு திரும்பிய போது, அதே பெண் தான் தனது மனைவி என்பதைக் கண்டு ஆச்சரியப்படுகிறார்.
மணிப்பூரின் மிதக்கும் ஏரியான லோக்டக் ஏரியின் மீது பயணிக்கும் உள்ளூர்வாசிகள் மற்றும் ஒரு மீனவர் தற்செயலாக ஆயுதம் இருப்பதைக் காண்கிறார். ஹாபாம் பபன் குமார் இயக்கிய இந்த கவித்துவமயமாக செல்லும் திரைப்படமான ‘லோக்டக் லைரெம்பீ'-யில் திடீரென்று வன்முறை வெடிக்கிறது.
தேப் குமார் போஸ் இயக்கிய ’மாதங்கி மணிப்பூர்’ திரைப்படம், ஒரு நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த டோன்சா, ஓய்வு பெற்ற மனிதர் மற்றும் அவரது வயது வந்த மூன்று குழந்தைகளின் கதையை விவரிக்கிறது. தலைமுறை மாற்றங்களால், அவர்கள் தங்கள் வாழ்க்கையில் வெவ்வேறு திசைகளில் நகர்கிறார்கள். குடும்பம் சிதைந்துவிடும் என்று தோன்றுகிறது. ஆனால் பின்னர் அவர்கள் ஒருவரையொருவர் நன்றாக புரிந்து கொள்ளத் தொடங்குகிறார்கள். அதன் பிறகு மகிழ்ச்சியுடன் ஒன்றாக வாழ முடிவு செய்கிறார்கள்.
ஒய்னம் கௌதம் இயக்கிய,’ பிஜிகி மணி’யின் கதாநாயகியான யாய்பாபி - தனது குடும்பத்தை மீண்டும் இணைக்கும் பணியை மேற்கொள்கிறார். அவள் பெற்றோருக்கும், அவர்களைக் கைவிட்ட தன் சகோதரன் சனாஜோபாவுக்கும் இடையே உள்ள உறவு முரண்பாட்டை குறைக்க முயற்சிக்கிறாள். மணிப்பூரின் சமூக-அரசியல் சூழ்நிலையில் உருவாகும் யாய்பாபியின் கடந்த கால மற்றும் நிகழ்கால வாழ்க்கைப் பயணம் தான் கதையின் பின்புலமாக அமைகிறது.
மணிப்பூரில் உள்ள கோரஸ் ரெபர்ட்டரி தியேட்டரின் நிறுவனர்-இயக்குனர் ரத்தன் தியாமின் வாழ்க்கையை ‘ரத்தன் தியாம்: தி மேன் ஆஃப் தியேட்டர்’ திரைப்படம் கதைகளமாக கொண்டு செல்கிறது. அவர் புகழ்பெற்ற மணிப்பூரி கவிஞர், நாடக ஆசிரியர், ஓவியர், இசைக்கலைஞர், நாடகக்கலை குரு ஆவார். அவர் 2013-2017 வரை சிறப்புமிக்க தேசிய நாடகப் பள்ளியின் தலைவராக பணியாற்றியவர். அவர் 1987 முதல் 1989 வரை தேசிய நாடகப் பள்ளியின் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். இத்திரைப்படத்தை ஓகென் அமச்சம் மற்றும் நிர்மலா சானு இயக்கியுள்ளனர்.
குஞ்சமோகனின் தேசிய அகாடமி விருது பெற்ற சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட ‘இலிஷா அமாகி மாகவ்’ திரைப்படத்தில், ஆற்றில் மீன்பிடித்து தனது குடும்பத்திற்கு உணவளிக்க சாவோபா போராடுகிறார். பல நாட்களுக்குப் பிறகு, சௌபாவும் அவரது மகனும் ஹில்சாவைப் பிடிக்கின்றனர். மகிழ்ச்சியுடன், ஹில்சா கறி சமைக்க வீட்டிற்கு வந்தனர். ஆனால் சௌபா அரிசி வாங்குவதற்காக தான் பிடித்த ஹில்சாவை விற்கிறார். இந்தப் படத்தை நிங்தௌஜா லாஞ்சா இயக்கியுள்ளார்.
அசோக் வெயிலூ இயக்கிய ‘லுக் அட் தி சீ’ திரைப்படத்தில், ஹாய், 40 வயதான கிராமவாசி ஒருவர் தனது குடும்பத்துடன் மணிப்பூரில் உள்ள ஒரு தொலைதூர கிராமத்தில் வசிக்கிறார். அவர்களை அந்த கிராமம் ஊரை விட்டு விலக்கி வைத்து விடுகிறது. அதற்கு காரணம் தேர்தலில், கிராமவாசிகள் நிறுத்திய வேட்பாளருக்கு தான் வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்திய நிலையில், ஹாய் தனது வாக்களிக்கும் தனிப்பட்ட உரிமைக்காக போராடுகிறார். இயக்க உள்ளார்.
போருன் தோக்சோம் இயக்கிய ‘ தி சைலன்ட் போயட்’ திரைப்படத்தில், மணிப்பூரில் உள்ள மிகவும் பாதுகாக்கப்பட்ட மருத்துவமனை சிறைச்சாலைக்குள், ‘தற்கொலைக்கு முயன்றதற்காக’ தண்டனையை அனுபவித்துக் கொண்டிருக்கும்போது, தனது குறிப்பேட்டில் எழுதும் ஆர்வலர் ஐரோம் ஷர்மிளா சானுவின் கவிதைப் பக்கத்தின் கதையை விவரிக்கிறது.
தி டெயி்ன்டட் மைனர்: பள்ளிக்குச் செல்லும் சிறுவன் சரோன், தனது கால்பந்து பயிற்சியாளரால் அணித் தலைவனாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சனாவைப் பார்த்து பொறாமைப்படுகிறான். மேலும், ரசாயனம் தெளிக்கப்பட்ட காய்கறியை சானாவுக்கு சாப்பிடக் கொடுத்து விடுகிறான். அடுத்த நாள் சனாவால் வர இயலவில்லை. இந்தப் படத்தை ரோமி மெய்டே இயக்கியிருக்கிறார்.
*********
MSV/GS/DL
(Release ID: 1877493)
Visitor Counter : 210