கலாசாரத்துறை அமைச்சகம்
மத்திய கலாச்சார அமைச்சகத்தின் சங்கீத நாட்டிய அகாடமி சார்பில் நவம்பர் 19 மற்றும் 20-ம் தேதிகளில் இந்தியா கேட்டில் கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு
Posted On:
18 NOV 2022 2:34PM by PIB Chennai
மத்திய கலாச்சார அமைச்சகத்தின் சங்கீத நாட்டிய அகாடமி சார்பில் நவம்பர் 19 மற்றும் 20-ம் தேதிகளில் இந்தியா கேட்டில் கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில், கேரளாவின் பிரபலமான செண்ட மேளம், கதக்களி நடனம், மணிப்புரி நடனம், பொம்மலாட்டம் ஆகியவை நவம்பர் 19-ம் தேதி நடத்தப்பட உள்ளது. இவற்றுடன் ஒடிசா நடனம் மற்றும் கதக்களி நடன நிகழ்ச்சிகளும் நவம்பர் 20-ம் தேதி இடம் பெறுகிறது. நவம்பர் 19 மற்றும் 20ம் தேதிகளில் செண்ட மேளத்தை தில்லி, பஞ்சவாத்திய அறக்கட்டளை நடத்துகிறது.
கதக்களி நடனம் கலாஆஷிஷ் அமைப்பின் மாணவர்கள் மூலம் நடத்தப்படுகிறது. 19-ம் தேதி, முகமது ஷமீம் மற்றும் குழுவின் பொம்மலாட்டமும், 20-ம் தேதி கலாபாஸ் குழுவின் பொம்மலாட்டமும் நடத்தப்படுகிறது.
கடந்த செப்டம்பர் 8-ம் தேதி பிரதமர் திரு நரேந்திர மோடி, மத்திய விஸ்தா தொடங்கிய பிறகு மத்திய கலாச்சார அமைச்சகம், மகாத்மா காந்தி, குருதேவ் ரவீந்தரநாத் தாகூர், ராஜா ராம் மோகன்ராய் ஆகியோரை நினைவு கூரும் வகையில் இது போன்ற பல கலை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
**************
(Release ID: 1877032)
MSV/ES/KPG/KRS
(Release ID: 1877125)
Visitor Counter : 125