பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
ஏகல்வியா மாதிரி உறைவிடப்பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க பழங்குடி மாணவர்களுக்கான தேசிய கல்விச்சங்கமும், 1எம்1பி அறக்கட்டளையும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன
प्रविष्टि तिथि:
18 NOV 2022 2:10PM by PIB Chennai
ஏகல்வியா மாதிரி உறைவிடப்பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க பழங்குடி நல அமைச்சகத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள தன்னாட்சி அமைப்பான பழங்குடி மாணவர்களுக்கான தேசிய கல்விச்சங்கம் மற்றும் 1எம்1பி அறக்கட்டளை இடையே புதுதில்லியில் உள்ள இந்த சங்கத்தின் தலைமையகத்தில் 2022 நவம்பர் 7 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில் சங்கத்தின் ஆணையர் திரு அசித் கோபால், 1எம்1பி மேலாண்மை இயக்குனர் திரு மானவ் சுபோத் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
சிபிஎஸ்இ தொடங்கியுள்ள மிகை எதார்த்தம்/ இணைப்பு நிஜமாக்கம் (ஆக்மென்டட் ரியாலிட்டி) மெய்நிகர் எதார்த்தம் (விர்ச்சுவல் ரியாலிட்டி) ஆகியவற்றில் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் திறனை ஏற்படுத்துவது இந்த நிகழ்ச்சியின் நோக்கமாகும். இந்த ஒப்பந்தத்தின் முதல் கட்ட நிகழ்ச்சி ராஜஸ்தான், உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களில் நடத்தப்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1876972
**************
MSV/SMB/AG/KRS
(रिलीज़ आईडी: 1877077)
आगंतुक पटल : 212