வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறையின் உள்ளடக்கத்தில் சுய கட்டுப்பாடு தேவை: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

प्रविष्टि तिथि: 17 NOV 2022 4:58PM by PIB Chennai

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், உள்ளடக்கம் தொடர்பாக ஊடகங்கள் மற்றும் பொழுதுபோக்கு துறையினர் சில சுய கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். 

புதுதில்லியில் இந்திய தொழில் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த உச்சிமாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அவர், ஒரு பக்கம் நாம் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் குடும்ப மதிப்புகள் தொடர்பாக பேசி வருகிறோம், மறுபக்கம் தொலைக்காட்சி மற்றும் ஒடிடி தளங்களில் நாம் பார்க்கும் விஷயங்கள் இந்திய கலாச்சார பரப்புக்கு  அப்பாற்பட்டவையாக உள்ளன என்றார்.

பொழுதுபோக்குக்கு நவீனம் மற்றும் கவரும் வகையிலான உள்ளடக்கங்கள் வரவேற்கத்தக்கவை, ஆனால், அவற்றை வெளிப்படுத்தும் முறையில் கண்ணியம் தேவை எனறும் இந்திய குடும்பங்கள் மற்றும் கலாச்சாரங்களில் கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறையினர் சுய கட்டுப்பாடுகளை கடைபிடிக்கவில்லை என்றால், சமூகத்தில் எதிர்ப்பை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதுடன் அரசு தலையிட்டு ஒழுங்குமுறை ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் உருவாகும் என்று அவர் கூறினார்.

ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத்துறை மக்களுக்கு தகவல்களை தெரிவிப்பதுடன் அவர்களை உலக தொடர்பிலேயே இருக்க வைத்திருப்பது பாராட்டுக்குரியது என்று அவர் தெரிவித்தார்.

கொவிட் பெருந்தொற்று காலத்தில் பயனுள்ள தகவல்களையும், பொழுதுபோக்கு அம்சங்களையும் வழங்கி மக்களுக்கு ஊடகங்கள் சேவையாற்றியதாக அவர் கூறினார்.  இந்த துறையில் நமது இளைஞர்களுக்கு அதீத வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.  தொழில்நுட்பம் முதல் படைப்பாற்றல் வரை பல்வேறு பிரிவுகளில் நமது இளைஞர்களும், இளம் பெண்களும் இதில் பிரகாசிக்க முடியும் என்று அவர் கூறினார்.

5ஜி தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டிருப்பது இந்த துறையின் வளர்ச்சியை மேலும் அதிகரிக்கும் என்று அவர் தெரிவித்தார்.  இந்த துறையில் வெளிநாட்டு நேரடி முதலீடுகள் தளர்த்தப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.  இத்துறையை சேர்ந்தவர்கள் சுதந்திரமாக செயலாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர், அரசு அனைத்து வகையிலும் உதவ தயாராக இருப்பதாக உறுதியளித்தார்.

மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பை காணவும். https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1876805

**************

SMB/PLM/PK/KRS


(रिलीज़ आईडी: 1876870) आगंतुक पटल : 225
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: हिन्दी , English , Urdu , Marathi , Telugu