சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஐநாபருவநிலை மாநாட்டில் “சிறு தீவு நாடுகளில் உறுதிமிக்க அடிப்படை கட்டமைப்புமேம்பாட்டை விரைவுபடுத்துதல்” என்ற அமர்வில் மத்திய சுற்றுச்சூழல், வனம்மற்றும் பருவநிலை மாற்றத்துக்கான அமைச்சர் பூபேந்தர் யாதவ் பங்கேற்றார்

Posted On: 17 NOV 2022 2:00PM by PIB Chennai

ஐநா பருவநிலை மாநாட்டில் “சிறு தீவு நாடுகளில் உறுதிமிக்க அடிப்படை கட்டமைப்பு மேம்பாட்டை விரைவுபடுத்துதல்” என்ற அமர்வில் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துக்கான அமைச்சர் பூபேந்தர் யாதவ் பங்கேற்றார்

தீவு நாடுகளில் உறுதிமிக்க அடிப்படை கட்டமைப்பு  தொடர்பான, தொலைநோக்கு அறிக்கை  தாக்கல் செய்யப்பட்டவுடன் ஐஆர்ஐஎஸ் என்ற இதுதொடர்பான திட்டத்தின் முன்மொழிவு தொடர்பான அறிவிப்பும்  இந்த அமர்வில் வெளியிடப்பட்டது.  ஐஆர்ஐஎஸ் என்பது இந்தியாவில் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை இயக்கத்தை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது. 

ஐநா பருவநிலை மாநாட்டில் இதுதொடர்பான அமர்வில் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ், மொரீஷியஸ் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு காவ்யதாஸ் ரமணோ உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

மீளும் தீவு நாடுகளுக்கான கட்டமைப்பு (ஐஆர்ஐஎஸ்) தொடர்பான திட்ட முன்மொழிவுகளை அறிவிப்பது  இந்த அமர்வின் முக்கிய நோக்கமாகும்.   இந்த அமர்வில் அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் பேசுகையில்,

சிறு தீவு நாடுகளில் மீள்தன்மை மற்றும் பருவநிலை தகவமைப்பு தீர்வுகளை அடைவதற்காக  ஏற்படுத்தப்பட்ட முக்கிய  முன்முயற்சி ஐஆர்ஐஎஸ் என்றார். 

பல்வேறு நாடுகளின் ஒத்துழைப்பு மற்றும் முக்கிய வழிகாட்டுதல்களுடன் 26 ஆவது ஐநா பருவநிலை மாநாட்டின் ஐஆர்ஐஎஸ் என்பது இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஜமைக்கா, மொரீஷியஸ் ஆகிய நாடுகளால் அறிமுகம் செய்யப்பட்டது.  தீவு நாடுகளின் மீள்தன்மை கட்டமைப்புகளுக்கான தீர்வுகள் குறித்த செயல்பாடுகள் தகவல்கள் ஆகியவற்றை பகிர்ந்து கொள்வதற்கான தளம் இதுவாகும்.

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு தீவு நாடுகளை பருவநிலை மாற்றம் உள்ளிட்டவற்றிலிருந்து பாதுகாத்து அவற்றின் நலன்களில் அக்கறை செலுத்துவதில் உறுதியுடன் உள்ளது.

பருவநிலை மாற்றம் என்பது மற்ற சுற்றுச்சூழல் சவால்களை விட மிகவும் சிக்கலானது என்பது நமக்கு தெரியும்.  கரியமில வாயு வெளியேற்றத்தை தடுக்காமல் சுற்றுச்சூழல் சவால்களில் வெற்றி பெறுவது இயலாது.

பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் இந்தியா உள்நாட்டில் சிறப்பாக செயல்படுவதுடன் பலதரப்பு ஒத்துழைப்பிலும் உறுதியுடன் செயல்படுகிறது.  உலக அளவில் அனைத்து சூழல் பிரச்சினைகளுக்கு எதிராகவும் போராடி மனித சமூகத்தை பாதுகாக்கும் நடவடிக்கையை இந்தியா தொடர்ந்து மேற்கொள்ளும். 

புவி வெப்பமயமாதல் என்பதும் முக்கிய பிரச்சினையாகும்.  இதிலும் சர்வதேச ஒத்துழைப்பு அவசியம்.

எந்தவொரு நாடும் இந்த விவகாரத்தில் தனியாக பயணிக்க முடியாது.  சரியான புரிதலும், சரியான சிந்தனையும், ஒத்துழைப்புடன் கூடிய செயல்பாடும், அடுத்த அரை நூற்றாண்டுக்கான நமது பயணத்தை கட்டமைக்க அவசியமாகும். பருவநிலை மாற்றத்தால் மிகவும் பாதிக்கப்படும் நாடுகளில் ஒன்றாக இந்தியாவும் உள்ளது என பருவநிலை மாற்றம் தொடர்பான நாடுகளுக்கு இடையிலான மதிப்பீட்டு அறிக்கை தெரிவிக்கிறது.

இதனையே மற்ற நாடுகளுக்கும், தீவு நாடுகளுக்கும் உதவும் மனப்பான்மையில் இந்தியா உள்ளது.  7,500 கிலோமீட்டர் நீள கடற்கரையையும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு தீவுகளையும் கொண்ட நாடாக இந்தியா விளங்குகிறது.  இந்தியாவில் மிகப்பெரிய அளவிலான மக்கள் கடற்கரை பகுதிகளில் கடலை முக்கிய வாழ்வாதாரமாக கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.  

எனவே, உலகளவில் அதிகம் பாதிக்கப்படக்கூடிய நாடாகவும் இந்தியா உள்ளது.  1995 முதல் 2020 ஆம் ஆண்டு காலம் வரை  பருவநிலை மாற்றம் தொடர்பான 1,058 பேரிடர்களை இந்தியா சந்தித்துள்ளது. 

கார்பன் வெளியேற்றத்தில் இந்தியா உலக சராசரியை விட குறைவாகவே உள்ளது.  இந்தியாவை போல் மற்ற நாடுகளும் செயல்பட்டால் பருவநிலை மாற்றப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். 

“பேரிடர் மீள் தன்மை கட்டமைப்புக்கான கூட்டமைப்பு எனப்படும் சிடிஆர்ஐ மற்றும் ஐஆர்ஐஎஸ்  என எதுவாக இருந்தாலும் அது உள்கட்டமைப்பு தொடர்புடையது மட்டுமே அல்ல, அது மனித நேயத்தை நோக்கிய அனைவரின் கூட்டு பொறுப்பாகும்.  இது நமது தவறுகளிலிருந்து திருத்திக் கொள்ளும் பொதுவான வழி” என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் வாசகங்களோடு எனது உரையை நிறைவு செய்கிறேன் என்று அமைச்சர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும். https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1876724

**************

SMB/PLM/PK/KRS


(Release ID: 1876853) Visitor Counter : 185