பாதுகாப்பு அமைச்சகம்
விரைவான மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் முடிவுகள் எடுப்பதன் மூலம் நிதி ஆதாரங்களை நியாயமான முறையில் பயன்படுத்தப்படுவது ஆயுதப்படையினர் தயார் நிலையில் இருப்பதற்கு உதவும்: புதுதில்லியில் பாதுகாப்பு கணக்குப் பிரிவின் தணிக்கையாளர்கள் மாநாட்டில் பாதுகாப்பு அமைச்சர் உரை
Posted On:
14 NOV 2022 2:19PM by PIB Chennai
விரைவான வெளிப்படைத்தன்மையுடன் எடுக்கப்பட்ட முடிவுகள் மூலம் நிதி ஆதாரங்களை நியாயமான முறையில் பயன்படுத்தப்படுவது ஆயுதப்படையினர் தயார் நிலையில் இருப்பதற்கு உதவும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இதற்கான நடவடிக்கைகளை பாதுகாப்பு கணக்குத் துறை உறுதிப்படுத்த வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.
புதுதில்லியில் பாதுகாப்பு கணக்குத் துறையைச் சேர்ந்த தணிக்கையாளர்களின் இரண்டு நாள் மாநாட்டை அவர் இன்று (14.11.2022) தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், தொழில்நுட்பத் திறனை மேலும் அதிகரிக்க வேண்டும் என்றும், பணித் திறனை மேம்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். பாதுகாப்புத் துறை நிதி அமைப்பின் காவலாளிகளாக இத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் திகழ்வதாகவும், நிதி ஆதாரங்களை கையாளுவதன் மூலம் நாட்டை கட்டமைப்பதில் அவர்கள் பங்களிப்பதாகவும் கூறினார்.
தங்களது தணிக்கை பணிகள், இதர நடவடிக்கைகளுக்கு இடையே பாதுகாப்புத் துறை அமைச்சகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியை சம்பளம், பணியாளர்களுக்கான படி, ஓய்வூதியதாரர்களுக்கான நிதி, பல்வேறு கொள்முதலுக்கான நிதி ஆலோசனை வழக்குகளை நடைமுறைப்படுத்துவது உள்ளிட்ட பணிகளை பாதுகாப்பு கணக்கு துறை கையாளுவதாகவும் அவர் தெரிவித்தார். 2022-23 ஆம் நிதியாண்டில் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு ரூ.5.25 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.1.19 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும். https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1875776
**************
MSV/IR/PK/IDS
(Release ID: 1875798)
Visitor Counter : 186