தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
53வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (ஐஎப்எப்ஐ) கலந்து கொள்ளவரும் பிரதிநிதிகளை வரவேற்க கோவா விழாக்கோலம்
53வது இந்திய சர்வதேச திரைப்பட விழா (ஐஎப்எப்ஐ) கோவாவில் நடைபெறும் என்று முடிவு எடுக்கப்பட்டதில் இருந்து, அந்த மாநிலம் அகமகிழ்ந்து திருவிழாவையும், அதில் பங்கேற்பவர்களையும் இரு கரங்களுடன் வரவேற்கத் தொடங்கியது. அந்த அளவிற்கு கோவா மிகுந்த உற்சாகத்துடன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது மட்டுமின்றி, தனது விருந்தோம்பல் பண்பை வெளியுலகிற்கு காட்டி வருகின்றது. இந்தத் திருவிழாவின் ஒவ்வொரு பிரிவிலும் பல அற்புதமான, வசீகரமான அம்சங்களுடன் கூடிய பல நிகழ்வுகள் இருப்பதன் மூலம், இதில் கலந்து கொள்ளவரும் பிரதிநிதிகளை மீண்டும், மீண்டும் வரவேண்டும் என்ற அளவிற்கு பிரம்மாண்டமும், வசீகரமும் உண்டு. இந்த திருவிழா காலத்தில் காண்பதற்கரிய உலக சிறந்த திரைப்படங்களின் திரையிடல்களைத் தவிர, சினிமாத்துறையைச் சார்ந்த ஜாம்பவான்களின் சிறந்த திரைப்படங்கள் மீதான விவாதங்களைத் தவிர, 53வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் புத்தம் புதிய பல சுவாரஸ்யம் மிக்க நிகழ்வுகள் நிச்சயம் உண்டு.
திருவிழா மைல்
'வெற்றிக்கான பாதை' தடைகளால் அமைக்கப்பட்டிருக்கலாம். ஆனால் 53வது இந்திய சர்வதேச திரைப்பட விழா 'சாலை' விழாக்களால் அமைக்கப்பட்டுள்ளது.
விழா மைல் அல்லது பனாஜியில் உள்ள கலா அகாடமியில் இருந்து கோவா பொழுதுபோக்கு மைய வளாகம் வரையிலான நடைபாதை கண்கவரும் கலை வேலைப்பாடுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த பிரம்மாண்ட கலை வேலைப்பாடுகள் மற்றும் விழாக்கோல ஏற்பாடுகள் இதில் பங்குகொள்பவர்களை மட்டுமின்றி அந்த பாதையில் செல்லும் அனைவரையும் சுண்டி இழுக்கும். இந்த ராஜபாதையில் சுற்றுலாப் பயணிகள், உள்ளூர்வாசிகள் மற்றும் திருவிழாப் பிரதிநிதிகள் என அனைவரும் விரும்பி உண்ணும் உணவு வகைகளுக்காக பல விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
திறந்தவெளி திரையிடல்கள்
இந்த திருவிழாவில் கலந்து கொள்ள பதிவு செய்யாத சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர்வாசிகளுக்கு, 53வது இந்திய சர்வதேச திரைப்பட விழா, ஒரு சவாலை வழங்க முடிவு செய்துள்ளது. அதாவது உலக ரசனையோடு கூடிய சில கலைப்படைப்புகள் இலவசமாக திறந்தவெளியில் திரையிடப்படும். இதனைக்கண்டு களித்தவர்களால் அப்படியே செல்ல முடியாமல், இந்தத் திருவிழாவில் தாங்களும் பங்கேற்க வேண்டும் என்ற முடியில் அவர்கள் வந்து விடுவார்கள்.
அல்டினோவில் உள்ள ஜோகர்ஸ் பார்க், மார்கோவில் உள்ள ரவீந்திர பவன் மற்றும் மிராமர் கடற்கரை ஆகிய இடங்களில் சினிமா இலவசமாக திரையிடப்படும்
பொழுதுபோக்கு மண்டலம்
திரையிடல்கள், கலந்துரையாடல்கள் மற்றும் சினிமாத்துறையை சிறந்த ஆளுமைகளால் விளக்க-விவாத உரையும் உண்டு. மேலும் வேடிக்கை மற்றும் பொழுதுபோக்கின் பல்வேறு அம்சங்களை ரசிக்க பகவான் மஹாவீர் சிறுவர் பூங்கா மற்றும் கலைப் பூங்காவில் பொழுதுபோக்கு மண்டலங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பொழுதுபோக்கு மண்டலங்கள் திருவிழாக் காலத்தில் பிரதிநிதிகள் மற்றும் பிரதிநிதிகள் அல்லாதவர்களுக்கும் திறந்திருக்கும். இரண்டு இடங்களிலும் நேரடி நிகழ்ச்சிகள், கலை வேலைப்பாடுகளுடன் கூடிய சில அரங்கங்கள் மற்றும் நிச்சயமாக, உணவு விடுதிகள் இடம்பெறும்.
இந்திய சர்வதேச திரைப்பட விழா பற்றி....
1952-யில் நிறுவப்பட்ட இந்திய சர்வதேச திரைப்பட விழா (ஐஎப்எப்ஐ), ஆசியாவின் மிக முக்கியமான திரைப்பட விழாக்களில் ஒன்றாகும். திரைப்படங்கள், அவர்கள் சொல்லும் கதைகள் மற்றும் அதற்குப் பின்னால் உள்ள கலைஞர்களை கொண்டாடுவதுதான் இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் முக்கிய அம்சம்.
அவ்வாறு செய்வதன் மூலம், திரைப்படங்களுக்கு சிறந்த வகையில் பாராட்டும், இந்த கலையை மிக அற்புதமாக வளர்க்கவும், கலைஞர்களை ஊக்குவிக்கவும் முடியும். இதன் மூலம் மக்களிடையே அன்பு, புரிதல் மற்றும் சகோதரத்துவத்தின் வடிவங்களை உருவாக்க முடியும்.
.இந்த விழா ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தால் கோவா பொழுதுபோக்குச் சங்கம், கோவா அரசுடன் இணைந்து நடத்தப்படுகிறது. 53வது இந்திய சர்வதேச திரைப்பட விழா தொடர்புடைய அனைத்து புதிய தகவல்களுக்கும், திருவிழா வலைத்தளமான www.iffigoa.org, PIB இணையதளம் (pib.gov.in), ட்விட்டர், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிரம் போன்ற சமூக ஊடக கணக்குகள் மற்றும் கோவா பத்திரிக்கை தகவல் அலுவலகத்தின் சமூக ஊடகப்பிரிவில் மூலமும் அறிந்து கொள்ளலாம்.
.காத்திருங்கள், சினிமாக் கொண்டாட்டத்தின் கோப்பையில் இருந்து அதிகமாகக் அருந்திக்கொண்டே இருப்போம்...அதன் மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொள்வோம்.
******
MSV/GS/DL
(Release ID: 1875670)
Visitor Counter : 208