சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
சிஓபி 27 மாநாட்டின் இந்தியா அரங்கின் குழு விவாதத்தில் மத்திய வனம், சுற்றுச்சூழல், பருவநிலை மாற்ற அமைச்சக செயலாளர் பங்கேற்றார்
Posted On:
11 NOV 2022 3:00AM by PIB Chennai
எதிர்காலத்தில் உலகளாவிய மக்களின் நிலைத்த நல்வாழ்வுக்கான தொழில்நுட்பத் தேவைகளையும், அவற்றின் மதிப்பீட்டையும் கண்டறிவதற்காக சிஓபி 27 மாநாட்டில் உள்ள இந்தியா அரங்கில் “நிலைத்த வாழ்க்கைக்கான தொழில்நுட்பத் தேவைகளின் மதிப்பீடு” பற்றிய குழு விவாதத்தை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை நடத்தியது. கலந்துரையாடலில் பங்கேற்று பேசிய மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்ற அமைச்சக செயலாளர் திருமதி லீனா நந்தன், இந்தியாவிற்கும், உலகிற்கும் இன்று தேவைப்படுவது தொழில்நுட்பமே என்றார். பருவநிலை மாற்றம் என்பது அனைவருக்குமான பிரச்சினை என்று கூறிய அவர், அதுபற்றி இப்போது அனைவருக்கும் சீரான புரிதல் உள்ளது என்றார்.
பருவநிலை மாற்றம் என்பது இயற்கை அடிப்படையிலான பல நிகழ்வுகளின் வடிவில் பேரழிவிற்கு வழிவகுத்தது என்று அவர் மேலும் கூறினார். நாம் எதிர்கொள்ளும் சவால்களுக்கு பதிலளிக்கும் வகையில் நமது வாழ்க்கை முறை மாற வேண்டும் என்றார் திருமதி லீனா நந்தன். நாம் எதைச் சாதிக்க விரும்புகிறோம் என்பதற்கும் அதை எப்படி அடைவது என்பதற்கும் இடையேயான இடைவெளிகளைக் குறைப்பதில் நமது விவாதங்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.
தொழில்நுட்ப தகவல், முன்னறிவிப்பு மற்றும் மதிப்பீட்டு கவுன்சில் நிர்வாக இயக்குனர் பேராசிரியர் பிரதீப் ஸ்ரீவஸ்தவா, தொழில்நுட்ப மேம்பாட்டு வாரிய செயலர் டாக்டர் ராஜேஷ் பதக், பருவநிலை தொழில்நுட்ப கட்டமைப்பு மையத்தைச் சேர்ந்த டாக்டர் ராஜீவ் கர்க் உள்ளிட்ட பல்துறை நிபுணர்கள் இதில் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் பகிர்ந்து கொண்டனர்.
**************
(Release ID: 1875065)
PKV/SMB/RR
(Release ID: 1875104)
Visitor Counter : 137