பாதுகாப்பு அமைச்சகம்

கடல்சார் வரலாற்று சங்கத்தின் 43ம் ஆண்டு கருத்தரங்கு நவம்பர் 15, 2022 அன்று நடைபெறுகிறது

Posted On: 09 NOV 2022 11:40AM by PIB Chennai

கடல்சார் வரலாற்று சங்கத்தின் 43ம் ஆண்டு கருத்தரங்கு   நவம்பர் 15, 2022 அன்று கொலாபாவின் ஐஎன்எச்எஸ்  அஸ்வினியில் உள்ள அகஸ்தியா அரங்கத்தில்  நடைபெற உள்ளது.

இந்த கருத்தரங்கின் கருப்பொருள் “இந்திய கடல் ஆற்றலின் செயலாக்கத்தை கண்டறிதல்” ஆகும். சுமார் 7,500 கிலோ மீட்டர் கடலோர சாலையை கொண்ட இந்தியா, பண்டைய காலம் தொட்டு மக்களுக்கு வாழ்வாதாரமாகவும், புத்தம் புதிய துறைசார்ந்த ஆய்வுகளுக்கு ஒரு தளமாக அமைந்துள்ளது.  இந்த கருத்தரங்கில் 10 துறைசார்ந்த நிபுணர்கள் கருப்பொருள் பற்றி உரையாற்றுகின்றனர்.

கருத்தரங்கில் கலந்துகொள்ளும் துறைசார்ந்த நிபுணர்கள்: ஓய்வு பெற்ற கடற்படை தளபதி (டாக்டர்) ஸ்ரீகாந்த் கெஸ்னூர், திரு. பிரமோத் கபூர், கேப்டன் ராகவேந்திர மிஸ்ரா (ஓய்வு), கேப்டன் எம். துரைபாபு, கேப்டன் ஹிமாத்ரி தாஸ், கடற்படை அதிகாரிகள் நினாத் பதர்பேகர் (ஓய்வு), காலேஷ் மோகனன், ஆர்.எஸ். திருமதி. ஜான்ஹவி லோகேகான்கர் மற்றும் திரு. டெனார்ட் டி'சோசா ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

இந்தக் கருத்தரங்கு ஒரு முழுமையான வரலாற்றுக் கண்ணோட்டத்தை வழங்குவதன் மூலம், பார்வையாளர்களின் ஆர்வத்தைத் தூண்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 15 நவம்பர் 2022 அன்று 9 மணி 30 நிமிடங்கள் முதல் 4 மணி  30 நிமிடங்கள் வரை நடைபெறும் இந்த கருத்தரங்கில் கலந்துகொள்ள விரும்பமுள்ளவர்களை கடல்சார் வரலாற்று சங்கம் அழைக்
கிறது. பதிவு விவரங்களுக்கு,
ops@mhsindia.org என்ற  மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

**************

SM/GS/RS/IDS



(Release ID: 1874682) Visitor Counter : 117