புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
புதிய மற்றும் புதுப்பிக்கவல்ல எரிசக்தி அமைச்சகமும் மின்சார அமைச்சகமும் "குடிமக்களை மையமாகக் கொண்ட எரிசக்தி மாற்றம்: மிஷன் லைஃப் மூலம் குடிமக்களை மேம்படுத்துதல்" என்ற தலைப்பில் சர்வதேச மாநாட்டை எகிப்தில் நடத்துகின்றன
प्रविष्टि तिथि:
08 NOV 2022 4:58PM by PIB Chennai
எகிப்தின் ஷர்ம்-எல்-ஷேக்கில் நடைபெற்றுவரும் சிஓபி-27-ன் இந்திய அரங்கில் “குடிமக்களை மையமாகக் கொண்ட எரிசக்தி மாற்றம்: குடிமக்களை மிஷன் லைஃப் (சுற்றுச்சூழலுக்கேற்ற வாழ்க்கை முறைகள்) மூலம் மேம்படுத்துதல்” என்ற தலைப்பிலான சர்வதேச மாநாட்டை இந்திய புதுப்பிக்கவல்ல எரிசக்தி மேம்பாட்டு நிறுவனம் (ஐஆர்இடிஏ), இந்திய சூரிய எரிசக்திக் கழம் (எஸ்இசிஐ), எரிசக்தி, சுற்றுச்சூழல் மற்றும் நீர் கவுன்சில் ஆகியவற்றுடன் இணைந்து,மத்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கவல்ல எரிசக்தி அமைச்சகமும் மின்சார அமைச்சகமும் இன்று நடத்துகின்றன.
புதிய மற்றும் புதுப்பிக்கவல்ல எரிசக்தி அமைச்சக செயலாளர் திரு பூபிந்தர் சிங் பல்லா தலைமையில் இந்த சிறப்பு நிகழ்வு நடைபெற்றது. லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தியுள்ள, குடிமக்களை மையமாகக் கொண்ட, எரிசக்தி அணுகல், மாற்றம், பாதுகாப்பு, நீதி தொடர்பான முயற்சிகள் எனும் சில தொலைநோக்குப் பார்வையை இந்நிகழ்வு காட்டுகிறது அதேசமயம் மிஷன் லைஃப்-ன் நடத்தைகள் என்பது சந்தைகளை செயல்படுத்துதல், கொள்கைகளில் செல்வாக்கு செலுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கியது. உலகளாவிய எரிசக்தி மாற்றத்தை எளிதாக்குவதற்கும் வலுப்படுத்துவதற்கும் எரிசக்தி திறன் மற்றும் குறைந்த கார்பன் தொழில்நுட்பங்கள் மற்றும் சந்தை முதலீடுகளை விரைவுபடுத்துவதற்கான வழிகள் குறித்து இம்மாநாடு விவாதிக்கிறது.
இந்த அமர்வில் ஐரீனாவின் துணைத் தலைமை இயக்குநர் டாக்டர் கௌரி சிங், சர்வதேச சூரியசக்திக் கூட்டணியின் அலையன்ஸ் தலைமை இயக்குநர் டாக்டர் அஜய் மாத்தூர் மற்றும் இந்திய தொழில்துறையின் தலைமை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
**********
MSV/SMB/IDS
(रिलीज़ आईडी: 1874536)
आगंतुक पटल : 231