தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

53 வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் ஆஸ்திரிய திரைப்படம் அல்மா மற்றும் ஆஸ்கர், ஒரு உணர்ச்சிமயமான தொடக்கத்துக்கு உறுதி

Posted On: 08 NOV 2022 11:08AM by PIB Chennai

நவம்பர் 20 முதல் 28ந் தேதி வரை கோவாவில் நடைபெறவுள்ள 53வது இந்திய சர்வதேச திரைப்பட விழா (ஐஎப்எப்ஐ),  ஆஸ்திரிய திரைப்படமான அல்மா மற்றும் ஆஸ்கர் படத்துடன் தொடங்குகிறது.

வியன்னா சமூகத்தைச் சேர்ந்த கிராண்ட் டேம் அல்மா மஹ்லர் (1879-1964) மற்றும் ஆஸ்திரிய கலைஞர் ஆஸ்கர் கோகோஷ்கா ((1886-1980) ஆகியோருக்கு இடையேயான உணர்ச்சிமிக்க, குமுறலான உறவின் அடிப்படையிலேயே இந்த சுயசரிதை படமாக்கப்பட்டுள்ளது. டைட்டர் பெர்னர் இயக்கிய இந்தப் படத்தின் மொத்த காட்சி நேரம் 110  நிமிடங்களாகும்.

 

சினிமா என்ற கலையை முழுமையாகக் கொண்டாடும்  53வது இந்திய சர்வதேச திரைப்பட விழா, ஒரு இசையமைப்பாளருக்கும்,  ஒரு கலைஞருக்கும் இடையிலான காதல் பற்றிய படத்துடன் தொடங்குவது மிகவும் பொருத்தமானதாக அமையும். வளர்ந்து வரும் ஓவியர் ஆஸ்கர் கோகோஷ்கா, தனது முதல் கணவரான குஸ்டாவ் மஹ்லரின் மரணத்திற்குப் பிறகு கட்டிடக் கலைஞர் வால்டர் க்ரோபியஸுடன் உறவில் இருக்கும் இசையமைப்பாளரான அல்மாவைச் சந்திக்கிறார். தனது கலைத்திறனை உணர முடியாத நபருடன் இருக்க விரும்பாத அல்மா, ஆஸ்கர் கோகோஷ்காவுடன்  உறவைத் தொடங்குகிறார். அவர்களின் உறவின் தன்மை அடிப்படையில் கோகோஷ்கா தனது மிகவும் பிரபலமான படைப்பை வரைகிறார். 'புயல்' மற்றும் 'கொந்தளிப்பு' என்று விவரிக்கப்படும் அவர்களின் உறவை பற்றி படம் ஆராய்கிறது.

இயக்குனர் டைட்டர் பெர்னர் ஒரு புகழ்பெற்ற ஆஸ்திரிய திரைப்பட மற்றும் நாடக இயக்குனர்,  நடிகர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் ஆவார்.

அவர் 1976-1980 வரை ஓடிய அல்பென்சாகா என்ற குடும்பம் மற்றும் கிராமத்து வரலாறு தொடர்பாக விருது பெற்ற ஆறு படங்களின் மூலம் இயக்குனராக ஆஸ்திரியாவில் நாடு முழுவதும் அறியப்பட்டார்.

 

புகழ் பெற்ற ஷ்னிட்ஸ்லரின் நாடகமான டெர் ரெய்ஜனை அடிப்படையாகக் கொண்ட பெர்லினர் ரெய்ஜென் (2006) திரைப்படத்திற்காக அவர் சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றார்.

 

அல்மா மற்றும் ஆஸ்கார் நவம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை, பனாஜியில் உள்ள ஐநாக்ஸ்- இல் திரையிடப்படுகிறது.

**********

MSV/GS/IDS



(Release ID: 1874458) Visitor Counter : 165