தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

53-வது இந்திய சர்வதேச திரைப்படத் திருவிழாவில் திகில் திரைப்படங்கள்

Posted On: 08 NOV 2022 10:12AM by PIB Chennai

அமானுஷ்யம், திகில் திரைப்படங்களுக்கு  உலகளவில் எப்போதுமே வரவேற்பு இருந்து வருகிறது. பார்வையாளர்களை இருக்கையின் நுனிக்குக் கொண்டு செல்லும் திரைப்படங்களுக்கு ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு மொழியிலும்  நிச்சயம் பஞ்சமிருக்காது. இது போன்ற திரைப்படங்களுக்குக் கிடைத்துள்ள மகத்தான வரவேற்பைக் கருத்தில் கொண்டு, வரும் நவம்பர் 20 முதல் 28-ஆம் தேதி வரை கோவா மாநிலம் பனாஜியில் நடைபெறவிருக்கும் 53-வது இந்திய சர்வதேச திரைப்படத் திருவிழாவில் “பயங்கரமான கனவுகள்” என்ற சிறப்பு பிரிவில் அண்மையில் வெளிவந்த அமானுஷ்ய திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன.

 

ஸ்லோவாக்யா நாட்டின் ‘நைட் சைரன்’ (Night Siren), பெரு நாட்டின் ‘ஹ்யுசேரா’ (Huesera), ஸ்பெயினின் ‘வீனஸ்’ (Venus), ஃபின்லாந்து நாட்டின் ‘ஹேட்சிங்’ (Hatching) ஆகிய திரைப்படங்கள் இந்தத் தொகுப்பில் திரையிடப்படுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளன.

*********

MSV/RB/IDS(Release ID: 1874457) Visitor Counter : 152