குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
குருநானக் தேவ் ஜெயந்தியை முன்னிட்டு மக்களுக்கு குடியரசுத் துணைத் தலைவர் வாழ்த்து
प्रविष्टि तिथि:
07 NOV 2022 4:01PM by PIB Chennai
குருநானக் தேவ் ஜெயந்தியை முன்னிட்டு, குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி வருமாறு-
“குரு நானக் தேவ் ஜியின் ஜெயந்தியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கும், வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
உண்மை, கருணை, நீதி ஆகிய உலகளாவிய நற்பண்புகளால் பிணைக்கப்பட்ட மனிதகுலத்தின் உள்ளார்ந்த ஒற்றுமையை தூண்டிய குருநானக் தேவ் ஜி போன்ற சிறந்த ஆசிரியர்களிடமிருந்து ஆன்மீக மற்றும் நீதி வழிகாட்டுதல்களைப் பெற்ற நமது நாடு ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது.
குருநானக் தேவ் ஜி போன்ற போதகர்களின் ஞானத்தால் இந்தியா விஸ்வகுரு என்னும் மதிப்பிற்குரிய அந்தஸ்தைப் பெற்றது. இரக்கமுள்ள நல்லொழுக்க வாழ்வு மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய சமுதாயத்தின் பாதையை அவர் நமக்குக் காட்டினார். அவரது ஷபாத்கள் மற்றும் சாகிகளின் புனிதம், முழு மனிதகுலத்தின் காலம் கடந்த ஆன்மீக பாரம்பரியமாகும்.
குரு நானக் தேவின் நித்திய செய்தி, கருணை, இரக்கம் மற்றும் அமைதியான உலகத்தை உருவாக்கும் பாதையில் நம்மை வழிநடத்தட்டும்."
******
SM/PKV/IDS
(रिलीज़ आईडी: 1874298)
आगंतुक पटल : 220