மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
azadi ka amrit mahotsav

மத்திய இணையமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர் துபாயில் புலம்பெயர்ந்த இந்தியர்களுடன் கலந்துரையாடல்

Posted On: 06 NOV 2022 2:10PM by PIB Chennai

மத்திய மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பம், திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவுத் துறை இணை அமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர், இந்தியா இன்று உலக வளர்ச்சியின் கலங்கரை விளக்கமாக உள்ளது, இது இந்தியாவின் முந்தைய நிலையை மாற்றிய ஒரு துடிப்பான தலைமையாலும், துணிச்சலான சீர்திருத்தங்களாலும் சாத்தியமானது என்று கூறினார்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் சனிக்கிழமை  நடைபெற்ற விஸ்வ சத்பவனா நிகழ்ச்சியில் புலம்பெயர்ந்த இந்தியர்களிடையே உரையாற்றிய திரு ராஜீவ் சந்திரசேகர், “இந்தியா இப்போது இருக்கும் இடத்தில் இருந்து, வரும் 25 ஆண்டுகளில் அமிர்த காலத்தில், இந்தியா மட்டுமே முன்னேற முடியும், அதுவே அதன் வளர்ச்சிப் பயணத்தின் இயல்பான அடுத்த கட்டமாக இருக்கும்’’ என்றார்.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமைத்துவம், விரிவான சீர்திருத்தங்கள், டிஜிட்டல் இந்தியா, திறன் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா போன்ற அரசின் முதன்மைத் திட்டங்களின் வெற்றி ஆகியவை, செயலிழந்த ஜனநாயகம் பற்றிய இந்தியாவின் முந்தைய நிலையை  மாற்றியமைத்துள்ளன என்று அமைச்சர் கூறினார்.

இந்திய புலம்பெயர்ந்தோர் பெருமளவில் கலந்துகொண்ட நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடியின் 20 ஆண்டுகால தலைமைத்துவத்தின் தாக்கம் பற்றிய இரண்டு புத்தகங்களை திரு சந்திரசேகர் வெளியிட்டார்.  இந்நிகழ்ச்சியை என்ஐடி அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்தது.

**************




(Release ID: 1874126) Visitor Counter : 156