பிரதமர் அலுவலகம்
கர்நாடகா முதலீட்டாளர் மாநாட்டில் பிரதமர் காணொலி மூலம் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
Posted On:
02 NOV 2022 12:23PM by PIB Chennai
நண்பர்களே, முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்றுள்ள அனைவரையும் நம்ம கர்நாடகா, நம்ம பெங்களூருவுக்கு வருக எனக் கூறி வரவேற்கிறேன். பாரம்பரியம் மற்றும் தொழில்நுட்பம், இயற்கை மற்றும் கலாச்சாரம், அழகான கட்டடக்கலை மற்றும் துடிப்பான ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு கர்நாடகா ஒருங்கிணைப்பாகத் திகழ்கிறது..
திறமை அல்லது தொழில்நுட்பம் என்றதும் ‘பிராண்ட் பெங்களூரு’ முன்னோடியாக திகழ்வது நினைவுக்கு வருகிறது என்பது இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகத்திற்கே தெரிந்தது.
உற்பத்தி மற்றும் தயாரிப்பு பெரும்பாலும் மாநில அரசின் கொள்கைகள் மற்றும் கட்டுபாட்டைச் சார்ந்தது. இந்த சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் மாநிலங்கள், குறிப்பிட்டத் துறைகளை இலக்காக வைத்து மற்ற நாடுகளுடன் கூட்டாண்மையை ஏற்படுத்த முடியும். இந்த மாநாட்டின் மூலம் ஆயிரக்கணக்கான கோடிகளில், கூட்டாண்மை திட்டமிடப்படுவது குறித்து மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த மாநாடு நாட்டின் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்கும்..
நண்பர்களே, 21-ம் நூற்றாண்டில் தற்போதைய சூழ்நிலையில் இந்தியா மட்டுமே முன்னோக்கிச் செல்கிறது.. கடந்த ஆண்டு சாதனை அளவாக 84 பில்லியன் டாலர் அளவுக்கு வெளிநாட்டு முதலீடு இந்தியாவிற்கு கிடைத்தது. , இந்த நிச்சயமற்ற தருணத்தில் இந்திய பொருளாதாரத்தின் அடிப்படைகள் பற்றி உலகம் ஏற்றுக்கொண்டது.. இக்கட்டான சூழ்நிலையில் உலக நாடுகளுடன் இணைந்து இந்தியா செல்வதுடன், உலக நாடுகளுடன் இணைந்து செயல்படுமாறு மற்ற நாடுகளை வலியுறுத்தி வருகிறது. மருந்து விநியோகக் கட்டமைப்பில் தடைகள் ஏற்பட்ட போது, மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளை விநியோகம் செய்வது குறித்து உலக நாடுகளுக்கு இந்தியா உறுதி அளிக்க முடிந்தது. சந்தைப்படுத்துதலில் இருந்த சிரமத்திற்கிடையே நம் நாட்டு மக்களின் ஆர்வத்தினால் உள்நாட்டு சந்தைகள் வலுவாக இருந்தது. சர்வதேச அளவில் நெருக்கடி நிலவிய போதிலும் இந்தியா சிறப்பாகத் திகழ்கிறது என்று நிபுணர்கள், பகுப்பாய்வாளர்கள், பொருளாதார நிபுணர்கள் பாராட்டியுள்ளார். நாள்தோறும் இந்தியப் பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்துவதற்கு நம் அடிப்படையை வலுப்படுத்த நாம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறோம். கொள்கை மற்றும் அமலாக்கம் தொடர்பான விவகாரத்தில் நாட்டிற்கு சிரமம் ஏற்பட்டபோது கடந்த 9-10 வருடங்களில் மேற்கொள்ளப்பட்ட அணுகுமுறையில் தற்போது மாற்றங்கள் வந்துள்ளன. முதலீட்டாளர்களுக்கு சிகப்பு நாடா கலாச்சாரத்தை மாற்றி, முதலீட்டுக்கான சிவப்புக் கம்பள வரவேற்பை நாம் உருவாக்கியுள்ளோம். சிக்கலான புதிய சட்டங்களை சீர்படுத்தியுள்ளோம்.
திடமான சீர்திருத்தங்கள், பெரிய உள்கட்டமைப்பு மற்றும் சிறந்த திறமை ஆகியவற்றுடன் மட்டுமே புதிய இந்தியாவை கட்டமைப்பது சாத்தியம். அரசின் ஒவ்வொரு நடவடிக்கையிலும் இன்று திடமான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. சரக்கு மற்றும் சேவை வரி, திவால் சட்டம், வங்கி சீர்திருத்தங்கள், யுபிஐ, காலாவதியான 1,500 சட்டங்கள் மற்றும் தேவையற்ற 40,000 விதிகளை நீக்கியது ஆகியவை இந்தச் சீர்திருத்தங்களாகும்.. பல்வேறு நிறுவனச் சட்டவிதிகளின் குற்றம் நீக்கம், முகமறியா மதிப்பீடு, அந்நிய நேரடி முதலீட்டிற்கான புதிய வழிகள், ட்ரோன் புவி மற்றும் விண்வெளி மற்றும் பாதுகாப்புத்துறை விதிமுறைகளில் தாராளமயமாக்கல் போன்ற நடவடிக்கைகள் காரணமாக முன் எப்போதும் இல்லாத வலிமையை நாடு பெற்றுள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் செயல்படும் விமான நிலையங்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது. 20-க்கும் மேற்பட்ட நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை விரிவாக்கப்பட்டுள்ளன.
பிரதமரின் விரைவு சக்தி தேசிய பெருந்திட்டத்தின் நோக்கம் ஒருங்கிணைந்த உள்கட்டமைப்பு வளர்ச்சியாகும். நாட்டின் கடைக்கோடி வரை உலகத்தரம் வாய்ந்த சேவையை அளிக்க வேண்டும். இப்பயணத்தில் இளைய சக்திகள் மூலம் இந்தியாவின் ஒவ்வொரு துறையும் முன்னேற்றம் அடைந்து வருகிறது..
முதலீடு மற்றும் மனிதவளத்தில் கவனம் செலுத்துவதன் மூலமே வளர்ச்சிக்கான நோக்கங்களை அடையமுடியும். இதே சிந்தனையுடன் முன்னோக்கிச் செல்லும் வகையில், சுகாதாரம் மற்றும் கல்வித்துறையில் முதலீடு அதிகரிக்கப்பட்டுள்ளது. உற்பத்தியை அதிகரிப்பதுடன் மனித வளத்தையும் மேம்படுத்துவது நமது நோக்கமாகும். பசுமை வளர்ச்சி மற்றும் நீடித்த எரிசக்தியையொட்டிய நமது முன்னெடுப்புகள் அதிக அளவிலான முதலீட்டாளர்களை ஈர்த்துள்ளன.
கர்நாடகாவின் இரட்டை எந்திர அரசின் சக்தியின் பிரதிபலிப்பு இம்மாநிலம் பல்வேறு துறைகளில், விரைவாக வளர்ச்சி அடைவதற்கு இதுவும் ஒரு காரணம். எளிதாக வர்த்தகம் புரிய உகந்த மாநிலங்கள் மற்றும் அந்நிய நேரடி முதலீட்டுக்கான மாநிலங்களின் பட்டியலில் கர்நாடகா தொடர்ந்து முன்னணி வகித்து வருகிறது. இந்தியாவில் உள்ள 500 செல்வ வளம் மிக்க நிறுவனங்களில் 400 நிறுவனங்களும், 100-க்கும் மேற்பட்ட யூனிகார்ன்களில் 40-க்கும் மேற்பட்டவையும் கர்நாடகாவில் உள்ளன. உலகில் மிகப் பெரிய தொழில்நுட்பத்திற்கான கேந்திரமாக கர்நாடகா குறிப்பிடப்படுகிறது. தொழில்துறை, தகவல் தொழில்நுட்பம், ஃபின்டெக், உயிரித்தொழில்நுட்பம், ஸ்டார்ட் அப் மற்றும் நீடித்த எரிசக்தி ஆகியவற்றுக்கான தாயகமாக அது திகழ்கிறது. ஒவ்வொரு துறையிலும் வளர்ச்சிக்கான புதிய அத்தியாயம் எழுதப்படுகிறது.
நண்பர்களே, இந்த அமிர்தகாலம் மற்றும் விடுதலைப் பெருவிழாவிலும் நாட்டுமக்கள் புதிய இந்தியாவை கட்டமைக்க உறுதிமொழி எடுத்துக் கொண்டுள்ளோம். 2047-ஆம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த நாடாக இந்தியா திகழ வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அனைவரையும் உள்ளடக்கிய, ஜனநாயக மற்றும் வலிமையான இந்தியாவின் வளர்ச்சி, உலகின் வளர்ச்சியை விரைவுபடுத்தும். இதனால் முதலீடும் இந்தியாவின் உத்வேகமும் ஒன்றிணைவது மிகவும் முக்கியம். இந்தியாவின் முதலீடு என்பது உள்ளடக்கத்தில் முதலீடு, ஜனநாயகத்தில் முதலீடு, உலகத்திற்கான முதலீடு மற்றும் சிறந்த தூய்மையான மற்றும் பாதுகாப்பான புவிக்கு முதலீடு.
உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள், நன்றி.
********
AP/PKV/DHA
(Release ID: 1873920)
Visitor Counter : 126
Read this release in:
Malayalam
,
Urdu
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Odia
,
Marathi
,
English
,
Hindi
,
Gujarati
,
Telugu
,
Kannada