விவசாயத்துறை அமைச்சகம்

வேளாண்மையும், வேளாண் பொருளாதாரமும் இந்தியாவின் பலம்- மத்திய வேளாண் அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர்

Posted On: 03 NOV 2022 6:16PM by PIB Chennai

தேசம் நேர்மறையான மாற்றங்களை நோக்கி முன்னேறிச் செல்வதாக மத்திய வேளாண் துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் கூறியுள்ளார்.  புதுதில்லியில் நடைபெற்று வரும் இந்தியா கேம் 2022 என்ற சர்வதேச ரசாயனம் மற்றும் பெட்ரோ கெமிக்கல் கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய அவர், வேளாண்மையும், வேளாண் பொருளாதாரமும் இந்தியாவின் பலம் என்றார்.  இந்தியாவின் தற்போதைய சூழல் தேசிய அளவிலும், உலகளவிலும் நல்ல மாற்றங்களை அடைந்துள்ளதாக கூறினார். 

அனைத்து வகைகளிலும் தேசத்தை வலுவானதாக்கும் திறனை தற்போது நாம் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.   அனைத்து அம்சங்களிலும் ஒருங்கிணைந்து செயல்படுவதன் மூலம் நமது இலக்குகளை அடைய முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.  அரசு, விவசாயிகள், தொழில் துறையினர் என அனைவரும் ஒரே நோக்கத்தோடு பணியாற்றி நேர்மறையான தாக்கங்களை கொண்டு வர வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

இவ்வாறு செயல்படுவதன் மூலம் தேசத்தை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.  வேளாண்மை லாபகரமாக அமைய உற்பத்தியும், உற்பத்தித் திறனும் அதிகரிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார். ரசாயன உரங்கள் முறையாக பயன்படுத்தப்பட வேண்டும் என்று கூறிய அவர், மண்வளம் தொடர்பான விழிப்புணர்வு அதிகரிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார். இவை அனைத்துமே விவசாய வளர்ச்சிக்கு அவசியம் என்று அவர் குறிப்பிட்டார். 

இந்த நிகழ்ச்சியில் ரசாயனம் மற்றும் உரத்துறை இணையமைச்சர் திரு பக்வந்த் கூபா, செயலாளர் திரு அருண் பரோகா, வேளாண் துறை செயலார் திரு மனோஜ் அகுஜா மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

**************

SM/PLM/PK/IDS



(Release ID: 1873548) Visitor Counter : 152


Read this release in: English , Urdu , Hindi , Punjabi