குடியரசுத் தலைவர் செயலகம்
நாகாலாந்தில் குடியரசுத்தலைவர்; கல்வி, சாலை உள்கட்டமைப்பு மற்றும் நிதித்துறையை வலுப்படுத்துவதற்கான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார்
நாட்டின் இயற்கை உணவு கட்டமைப்பாக திகழ்வதற்கான திறன் வடகிழக்கு பிராந்தியத்திற்கு உள்ளது: குடியரசுத்தலைவர் முர்மு
Posted On:
02 NOV 2022 5:02PM by PIB Chennai
நாகாலாந்து அரசு ஏற்பாடு செய்திருந்த கவுரவ வரவேற்பு நிகழ்ச்சியில் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு கலந்து கொண்டார். கொஹிமாவில் இன்று (02.11.2022), கல்வி, சாலை உள்கட்டமைப்பு மற்றும் நிதித்துறையை வலுப்படுத்துவதற்கான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து அவர் அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத்தலைவர் மாநிலத்தின் வளர்ச்சிக்கு உள்கட்டமைப்பை மேம்படுத்துவது முக்கியமான ஒன்றாக உள்ளது என்று கூறினார். மத்திய அரசின் கிழக்கு கொள்கையின்படி, வடகிழக்கு பிராந்தியத்தில் ஒட்டுமொத்தக் கட்சிக்கு கவனம் செலுத்துப்படுகிறது. பிரதமர் கிராம சாலைத் திட்டத்தின் கீழ் இன்று திறக்கப்பட்ட சாலைகள் மற்றும் பாலங்கள் இப்பிராந்தியத்தின் போக்குவரத்துக்கு ஊக்கமளிக்கும் என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
நாகாலாந்து இளைஞர்கள் திறமையுடன் கூடிய படைப்பாளர்களாக திகழ்கின்றனர் என்று கூறினர். 80 சதவீதத்திற்கு மேற்பட்ட கல்வி அறிவுடன் திறன்மிக்க நாகாலாந்து இளைஞர்கள் ஆங்கில மொழியில் சிறந்து விளங்குவதாக அவர் தெரிவித்தார். நாடு முழுவதும் தகவல் தொழில்நுட்பம், விருந்தோம்பல் மற்றும் இதர துறைகளில் அவர்கள் பணியாற்றுவதாக குடியரசுத்தலைவர் குறிப்பிட்டார்.
-----
SM/IR/KPG/IDS
(Release ID: 1873146)
Visitor Counter : 163