தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் 70வது நிறுவன தின கொண்டாட்டம்
Posted On:
01 NOV 2022 4:30PM by PIB Chennai
மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ், புது தில்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நடைபெற்ற, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் 70வது நிறுவன தின நிகழ்ச்சிகளைத் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியின்போது தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் 70 ஆண்டு கால பயணம் தொடர்பான கண்காட்சியையும் அவர் தொடங்கி வைத்தார். இந்த அமைப்பின் 70 ஆண்டுகால சாதனைகளை விளக்கும் ஆவணப்படமும் நிகழ்ச்சியில் திரையிடப்பட்டது. அஞ்சல் துறையுடன் இணைந்து சிறப்பு அஞ்சல் உறை ஒன்றும் இந்நிகழ்ச்சியின் போது வெளியிடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியின்போது, சிறந்த செயல்பாட்டிற்கான பவிஷ்ய நிதி விருதுகள்-2022 வழங்கப்பட்டது. ராஞ்சியில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் மண்டல அலுவலக கட்டடத்தையும் அமைச்சர் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பூபேந்தர் யாதவ், சட்டங்களை பகுத்தறிந்து எளிமைப்படுத்துதல் மூலம் வழக்குகள் குறைவதுடன் எளிதாக வணிகம் செய்ய இயலும் என்றார். தேசத்தை கட்டியெழுப்புவதில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) பங்கை அவர் எடுத்துரைத்தார்.
இந்நிகழ்ச்சியில் தொழிலாளர் நலத்துறை இணை அமைச்சர் திரு. ராமேஷ்வர் தெலி, தொழிலாளர் நலத்துறைச் செயலாளர் ஆர்த்தி அஹுஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
AP/PLM/RS/RR
**************
(Release ID: 1872938)
Visitor Counter : 219