சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கத்தை விரைவுபடுத்த தேசிய சுகாதார ஆணையம் பெங்களூருவில் பயிலரங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தது

Posted On: 31 OCT 2022 4:25PM by PIB Chennai

நாடு முழுவதும் ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கத்தை விரைவுபடுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் குறித்த  பயிலரங்கிற்கு தேசிய சுகாதார ஆணையம் பெங்களூருவில் ஏற்பாடு செய்திருந்தது.  2022 அக்டோபர் 28 அன்று நடைபெற்ற பயிலரங்கில் நாடு முழுவதிலுமிருந்து மாநில இயக்க இயக்குநர்கள், சுகாதார தொழில்நிறுவன தலைவர்கள், சுகாதார தொழில்நுட்ப நிறுவனங்களின் பிரதிநிதிகள் மேம்பாட்டு அமைப்புகள் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். இந்த பயிலரங்கை தேசிய சுகாதார ஆணையம் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் ஆர் எஸ் சர்மா தொடங்கிவைத்தார். நிகழ்வுக்கு இன்ஃபோசிஸ் இணை நிறுவனரும் தனித்துவ அடையாள அட்டை ஆணையத்தின் முன்னாள் தலைவருமான திரு நந்தன் நிலகேனி முன்னிலை வகித்தார்.

இந்தப் பயிலரங்கின் ஒரு பகுதியாக ஒரு குழுவினர் பெங்களூருவில் உள்ள  சி வி ராமன்  பொதுமருத்துவமனையைப் பார்வையிட்டனர். இந்த மருத்துவமனையால் மேற்கொள்ளப்பட்ட ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கத்தின் நடைமுறைகள் பற்றியும் அதன் தாக்கம் குறித்தும் பயனாளிகளிடம் கேட்டறிந்தனர்.  அண்மையில், இந்த மருத்துவமனை புறநோயாளிகள் பதிவுக்கு க்யூஆர் கோட் முறையை அமலாக்கத் தொடங்கியது. இதனால், புறநோயாளிகள் பிரிவில் காத்திருக்கும் நேரம் கணிசமாக குறைவதற்கு உதவியாக இருந்தது.

ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கம் சுகாதாரத்துறையில், உண்மையான ஒருங்கிணைப்பை ஏற்படுத்தியிருப்பது குறித்தும், இந்த இயக்கத்தை தீவிரமாக செயல்படுத்துவதன் மூலம் அனைவருக்கும் சுகாதாரம் என்பதை நோக்கிய பாதையை எவ்வாறு அடையமுடியும் என்பது குறித்தும், பயிலரங்க பங்கேற்பாளர்கள் விவாதித்தனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1872283

************** 

SM/SMB/KPG/KRS



(Release ID: 1872365) Visitor Counter : 126