வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
குஜராத்தின் மோர்பியில் உயிரிழந்தவர்களுக்கு மத்திய தொழில்துறை அமைச்சர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
31 OCT 2022 3:57PM by PIB Chennai
குஜராத்தின் மோர்பியில் நேற்று பாலம் அறுந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு.பியூஷ் கோயல் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். சர்தார் வல்லபாய் படேலின் 147-வது பிறந்தநாளை முன்னிட்டு புதுதில்லியில் இன்று நடந்த ஒற்றுமை ஓட்டத்தை கொடியசைத்து தொடங்கி வைக்கும் முன் அமைச்சர் பியூஷ் கோயல் உரையாற்றினார்.
பெரிய விபத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்வதாக அவர் ட்விட் செய்துள்ளார்.
வாணிய பவன் வளாகத்தில் இருந்து 'ஒற்றுமைக்கான ஓட்டத்தை' கொடியசைத்து தொடங்கி வைக்கும் முன், சர்தார் வல்லபாய் படேலின் திருவுருவப் படத்துக்கு திரு.கோயல் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
வர்த்தகம் மற்றும் தொழில்துறை அதிகாரிகள், ஊழியர்களுடன் இணைந்து 'ஒற்றுமைதின உறுதிமொழி'யையும் அவர் எடுத்துக் கொண்டார்.
தொடர்ந்து வாணிய பவன் வளாகத்தில் இருந்து 'ஒற்றுமைக்கான ஓட்டத்தை' கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
550-க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை ஒன்றிணைத்து நவீன இந்தியாவை கட்டமைத்த சர்தார் வல்லபாய் படேலின் திருவுருவப் படத்துக்கு திரு.கோயல் மலர் தூவி மரியாதை செலுத்தினார். ஒற்றுமைக்கான ஓட்டத்தில் கலந்து கொண்டு, 'ஒரே இந்தியா.. சிறந்த இந்தியா' என்ற கனவை நனவாக்குவதற்கான உறுதியான தீர்மானத்தையும் அவர் வலியுறுத்தினார்.
**************
Release ID: 1872272
SM/KG/KRS
(வெளியீட்டு அடையாள எண்: 1872364)
வருகையாளர் எண்ணிக்கை : 188