வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
வித்தியாசமான தீபாவளி - பள்ளிக் குழந்தைகள் தலைமையில் மாபெரும் தூய்மை பிரச்சாரம்
Posted On:
30 OCT 2022 1:39PM by PIB Chennai
இந்தியாவின் பல நகரங்களுக்கு இந்த தீபாவளி வித்தியாசமாக இருந்தது. தீபாவளியன்று கேட்கும் வழக்கமான பட்டாசு சத்தத்திற்குப் பதிலாக, பாடல்களும், தூய்மையை வலியுறுத்தும் முழக்கங்களுடன் சாலைகளிலும், தெருக்களிலும் வேன்கள் மற்றும் வண்டிகள் வீடு வீடாகச் சென்று பிரிக்கப்பட்ட குப்பைகளை சேகரித்தன.
குப்பைகளற்ற நகரங்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் மூலம் ஈரமான மற்றும் உலர் கழிவுகளை பிரித்தெடுப்பது குறித்த மாபெரும் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் இந்தியா முழுவதிலும் இருந்து கிட்டத்தட்ட 45,000 பள்ளிகளைச் சேர்ந்த 75 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். கூடுதலாக, குடிமக்கள், சமூகக் குழுக்கள் மற்றும் அமைப்புகள் தங்கள் நகரத்தின் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், நகராட்சி நிறுவனங்களின் தலைமையில் இந்த பிரச்சாரத்தில் ஆர்வத்துடன் பங்கேற்றன.
"ஸ்வச்சதா கே தோ ரங்" (தூய்மையின் இரு வண்ணங்கள்), "ஹர கீலா சூகா நீலா" (ஈரக்கழிவுக்கான பச்சைத் தொட்டி மற்றும் உலர் கழிவுகளுக்கு நீலத் தொட்டி) என்ற தலைப்பிலான பிரச்சாரம், பிரச்சாரத்தின் நடவடிக்கைக்கான அழைப்பாக, குறைந்த பட்சம் இரண்டு குப்பைத் தொட்டிகளை பிரித்தெடுப்பதை வலியுறுத்தியது. தூய்மை இந்தியா இயக்கத்தின் மூலம், 32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 3500 க்கும் மேற்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், பள்ளிகள், சமூகங்கள், குப்பைகளை பிரிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுடன் வீடு வீடாகச் சென்றன. பல்வேறு வயதினரைச் சேர்ந்த மாணவர்கள் ஓவியம் வரைதல், கலை மற்றும் கைவினைப் பொருட்கள், பச்சை லேபிள்கள் (ஈரக்கழிவுகளுக்கு) மற்றும் நீல லேபிள்கள் (உலர்ந்த கழிவுகளுக்கு), குப்பை தொட்டிகள் மற்றும் பொம்மைகளை உருவாக்குதல், தெரு நாடகங்கள் போன்ற சிறப்பு நிகழ்ச்சிகளில் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.
குப்பைகளை பிரித்தெடுக்கும் நாடு தழுவிய பிரச்சாரமானது, துப்புரவு, கழிவு மேலாண்மை மற்றும் பாரம்பரிய குப்பைகளுக்கு செல்லும் கழிவுகளை குறைத்தல் ஆகியவற்றுக்கான நடவடிக்கை மூலம் கவனம் செலுத்தும் பங்கேற்பைத் தூண்டியது. அனைத்து தரப்பு மக்களும் தங்கள் சொந்த சிறப்பு வழிகளில் கழிவுகளை பிரித்தெடுப்பது குறித்த விழிப்புணர்வை பரப்பியது, பிரச்சாரத்தை மக்கள் இயக்கமாக மிகப்பெரிய வெற்றியடையச் செய்தது. மாநிலங்கள் தங்கள் ஆற்றலை குப்பையில்லா நகரமாக மாற்றத் தொடங்கியுள்ளதால் இதன் தாக்கம் ஏற்கனவே துவங்கியுள்ளது.
**************
(Release ID: 1872009)
Visitor Counter : 212