அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

இந்திய-ஸ்வீடன் நிறுவனங்கள் இருதரப்பிலும் ஸ்டார்டப் நிறுவனங்களை அவசியம் ஆதரித்து ஒருங்கிணைந்த ஆராய்ச்சி மற்றும் மனிதவள பரிமாற்றத்தை மேற்கொள்ள வேண்டும் என்கிறார் மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

Posted On: 27 OCT 2022 2:55PM by PIB Chennai

இந்திய-ஸ்வீடன் நிறுவனங்கள் இருதரப்பிலும் ஸ்டார்டப் நிறுவனங்களை அவசியம் ஆதரித்து ஒருங்கிணைந்த ஆராய்ச்சி மற்றும் மனிதவள பரிமாற்றத்தை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.  

 இந்தியா-ஸ்வீடன் புதுமை கண்டுபிடிப்புகள் தினத்தின் 9-வது கூட்டத்தில் காணொலி காட்சி வாயிலாக உரையாற்றிய அவர், சமூக நலனுக்காக அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமைகளின் ஆற்றலைப் பயன்படுத்துவதன் மூலம் கூட்டு ஆராய்ச்சி மற்றும் கூட்டு ஸ்டார்ட்அப் நிறுவன  சுற்றுச்சூழல் அமைப்பு பகிர்ந்து கொள்வதற்கான எதிர்காலத்தை உருவாக்க உதவும் என்று கூறினார்.

இந்தியா மற்றும் ஸ்வீடனில் பொது சுகாதாரம், நர்சிங் அல்லது பராமரிப்பை மேம்படுத்துவதற்கான கணிசமான ஆற்றலைக் கொண்ட கூட்டுத் திட்டங்களைப் பற்றி குறிப்பிட்ட டாக்டர் ஜிதேந்திர சிங், 2020 இல், இந்திய அரசின் உயிரி தொழில்நுட்பத் துறை (DBT) மற்றும் ஸ்வீடன் அரசின் வின்னோவா ஆகியவை மானிய நிதியை அறிவித்ததாக தெரிவித்தார். சிறந்த திறனுடைய செயற்கை நுண்ணறிவு உதவியுடன் பொது சுகாதாரத்தை மேம்படுத்துவதற்காக புதிய தீர்வுகளைத் தயாரிப்பதை நோக்கமாகக் கொண்ட திட்டங்களை செயல்படுத்த இந்த மானியம் வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

 இரு நாடுகளுக்கு இடையே பொலிவுறு நகரங்கள், போக்குவரத்து, எரிசக்தி, தூய்மை தொழில்நுட்பங்கள், விண்வெளி உள்ளிட்ட துறைகளில்  கூட்டாண்மை ஏற்படுத்தப்பட்டிருப்பது குறித்து டாக்டர் ஜிதேந்திர சிங் குறிப்பிட்டார்.

 மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1871246  

**************

AND/IR/AG/SHA

 



(Release ID: 1871278) Visitor Counter : 141